உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/677

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

634 நம் நாட்டுப் பார்ப்பனர் வாழ வேண்டுமானால்-என்ற தலைப்பில் பெரியாரால் எழுதப்பட்ட தலையங்கம் 14-ந்: தேதி விடுதலை”யை அலங்கரித்தது:-"நாம் ஒரு சிறிதாவது அறிவு பெற்றுப் பகுத்தறிவு வாதிகள் ஆகி விட்டோமானால் கொல்லுவாரின்றியே பார்ப்பனன் செத்தான்' என்ற நிலைதான் ஏற்படும். அவர்கள், மேல் வகுப்பு மக்களாக வாழ்வதற்காகவே, கடவுள் மத நம்பிக்கை களை நம்மிடையே பரப்புவதுதான் பார்ப்பனர் கொள்கை. அவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் போல் காட்டிக் கொள்வது நம்மை நிரந்தரமாய் ஏமாற்றி வைக்கவே ஆகும்,' என்றார். பாப்பிரெட்டிப் பட்டியில் பேசும்போது பெரியாரின் ஆத்திரம் மிகவும் மேலெழுந்து நின்றது, 22.2.70 அன்று! நம் நாட்டிலுள்ள கோயில்களை இடித்துத் தரைமட்டம் ஆக்கும் வரை சாதி ஒழியாது; கோயில்களி அலுள்ள சிலைகளை உடைத்து, ரோட்டுக்கு ஜல்லியாகப் போடும் வரை சாதி நிலைபெற்றுதான் இருக்கும்’ என்றார் பெரியார் * அறநிலையத்துறை அமைச்சர் கே.வி. சுப்பய்யா, 24-ந். தேதி, விவாதத்துக்குப் பதிலளித்தபோது; கர்ப்பக்கிரகத் தில் அனைத்துச் சாதியினரையும் அனுமதிக்கும் சட்டத் திருத்தம்; தமிழில் அர்ச்சனை, கோயில் சொத்துகளின் மதிப் பீடு; கோயில் நிலங்களைக் கணக்கெடுத்தல்; பெண்களையும் அறங்காவலர்களாய் நியமித்தல் ஆகிய முற்போக்கான கருத்துகளை உரைத்தமைக்காக "விடுதலை’ 25-ந் தேதி, பாராட்டியிருந்தது. 23-ந் தேதி திருச்சி சிந்தனையாளர் கழகத்தில், மீண்டும் பிராமணாள் போர்டு அழிப்புக் கிளர்ச்சி தொடங்க வேண்டியிருக்கும்' என்று பெரியார் பேசினார்.26-ந் தேதி முதல் 4 நாள் பெரியார் பெங்களூரில் ஒய்வு எடுத்தார். - - பெரியாரின் சாதி ஒழிப்புப் பணிகளை வெகுவாகப் புகழ்ந்தும், மாணவர்கள் கலப்பு மணம் புரிந்து கொள்ள வேண்டுமென்றும், 26-3-70-ல் அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாச் சொற்பொழிவில் டாக்டர் எஸ்.