உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/680

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

637 30-ந்தேதி ஓரளவு உடல்நலம் பெற்றுக் கண்கொடுத்த வணிதம் நிகழ்ச்சிக்குச் சென்று, சுற்றுப் பயணம் தொடர்ந்: தார் பெரியார். அங்கு பேசும்போது, பெண் கடவுள் களுக்குப் பூசை செய்யவாவது, பெண் பூசாரிகளை நியமிக்க லாமே என்ற கருத்தைத் தெரிவித்தார். 6-5-70 அன்று சேலம் பி. ரத்தினசாமிப் பிள்ளை அவர்களின் நினைவு நாளில் பங்கேற்றுச், சென்னை கண் மருத்துவ, மனையில் முதல்வர் கலைஞரை மறுநாள் காலை 11-30 மணிக்குப் பார்த்து, நலம் விசாரித்தார். முதல்வரை 2-ந்தேதியன்று ஆளுநர் உஜ்ஜல்சிங், ஜனாதிபதி வி.வி.கிரி ஆகியோர் பார்த்துச் சென்றனர். 8-ந்தேதி வீடு திரும்பிய கலைஞர் 1 மாதம் ஒய்வில் தங்கினார், 9-5-70 தலையங்கப் பகுதியில் ‘விடுதலை'யில் பெரியார் மாவட்டத் தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். தஞ்சை, வேலூர், சேலம், தர்மபுரி, காஞ்சி நீங்கலாக மற்ற மாவட்டத் தலைநகர் களில் அழிக்கப்பட இன்னும் ஒரு வார வாய்தா இருக் கிறதே! முக்கால் வாசிப் பேர் பலகையை எடுத்து விட் டார்கள். பிராமணாள் எழுத்தை அவர்களாகவே சிலர் அழித்து விட்டார்கள். சில இடங்களில் மறைத்து விட்டார்கள். நாம் இந்தப் பிரச்சினையில் எந்தவிதமான அசம்பாவிதத்துக்கும் இடம் தரக்கூடாது. இந்தக் கிளர்ச்சி இன்னும் 3 மாதமோ 6 மாதமோகூட நீடிக்கலாம். பாதக மில்லை. இதில் நாம் தோல்வியடைந்தால் கூடப் பர வாயில்லை” என்றார். பகுத்தறிவுப் பள்ளி; அரிய வாய்ப்பு” என்று வீரமணி (ஆசிரியர்) எழுதிய துணைத் தலையங்கத்தில் ' என்.எஸ். சம்பந்தம் பிரச்சாரப் பள்ளிப் பொறுப்பாளராயிருப்பார். 10 நாள் நடைபெறும் . கட்டணம் ரூ. 20. நமக்குப் பிரச்சாரமே மிக இன்றியமை யாததாக இருப்பதால் இளைஞர்கள் இந்த வாய்ப்பினை நல்ல வண்ணம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்' என்று கோரியிருந்தது, - - 15-ந்தேதி மதுரையில் 'பிராமணாள் அழிப்பு வெற்றி பெற்றது. தொடர்ந்து பல ஊர்களிலும் அகற்றப்பட்டது.