உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/681

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

638 17-5-10 அன்று சென்னை கடற்கரை சீரணி அரங்கில், மேலவைத் தலைவர் சி.பி. சிற்றரசுவுக்கு வீடு, கார் ஆகியவை அன்பளிப்பாக வழங்கப்பட்ட நிகழ்ச்சியில் கலைஞருடன், பெரியாரும் பங்கேற்று, 'இது தனித்தமிழர் ஆட்சி. தமிழ் நாட்டில் இனி வேறு ஆட்சி வர விட மாட்டோம். நான் செய்ய எண்ணும் காரியங்களைத் தி.மு.க அரசு செய்து வருகிறது. அதனால் என் வேலை குறைகிறது' என்றார். 19-ந்தேதி தமிழர்களின் பொதுத் தொண்டு என்னுந் தயைலங்கத்தில், "இழிவு ஒழிப்பு நட வடிக்கை எனக்கு மட்டுந்தான் சொந்தமா? விளம்பரம் பெற்ற தமிழன் வேறு யாராவது எதிர்காலத் தமிழர்களின் நிலைபற்றிக் கவலைப்படுகின்றானா? இப்போது நமக்குத் தி.மு.க ஆட்சி கிடைத்திருப்பதே மிகப் பெரிய வெற்றி. காங்கிரஸ்காரன் ஆட்சி இப்போது இருந்தால் இதெல்லாம் நடக்குமா? இனி அவன் வந்தாலும் இதை நடக்க விடு வானா? என்ன காரணம்? நமது திராவிடர் கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் இலட்சியத்தில் ஒன்றாயிருப் பதுதானே காரணம்!’ எனப் பெரியார் திட்டியிருந்தார். காந்திக்கும் நேருவுக்கும் பிறகு அண்ணாவின் மறைவு தான் இந்தியாவின் மிகப் பெரிய தேசிய இழப்பு என்று சென்னை வந்திருந்த மத்திய துணையமைச்சர் கடில் கார் 29-5-70 அன்று புகழ்ந்து கூறினார். 'விடுதலை’ 19.3.70 ஆசிரியருக்குக் கடிதம் பகுதியில் நெய்வேலி கு. வீராசாமி என்பார்,"தந்தை பெரியாரின் முழு வாழ்க்கை வரலாறு எழு தப்பட வேண்டும்’ என்று கோரியிருந்தார். அந்தக் கடிதத் தினடியில் ஆசிரியர் குறிப்பாக, விரைவில் அப்பணிதொடங் கப்பட இருக்கிறது' என்று காணப்படுகிறது. (அப்பணி தொடங்கப்பட்டதாகத் தெரியவில்லையே!) 1-6-70 அன்று பேராசிரியர் டாக்டர் சி. இலக்குவனார் நாகர்கோயில் இந்துக் கல்லூரி முதல்வராகப் பொறுப்பேற்றார். 10-ந்தேதி காஞ்சி மணிமொழியார் பிறந்த நாள் விழாவில் கலந்து 'கொண்டு பெரியார், ஒரு குடும்பம் போலிருந்து நாம் பொதுத் தொண்டாற்றி வந்தோம். கொள்கையி