639 மாற்றமில்லாவிட்டாலும் இரண்டு கழகங்களாய்த் தனித் தனியே பிரிந்து பணியாற்றியவர்கள், இப்போது இணைந்து விட்டோம்! இதைப்பற்றிப் பொறாமையால் யாரும் , ஏதும் சொல்லலாம்! இதனால் ஒன்றும் குற்றமில்லை. இன்றையத் தி.மு.க. ஆட்சி, என் ஆயுள்வரை இருந்தால், நான் மனக் குறை இல்லாமல் சாவேன்' என்று, உணர்ச்சி மேலிடக் கூறினார். - கலைஞர் தமது பிறந்த நாள் விழாவில், "நான் பெரி யாரின் மாணவன் என்பதில்தான் எனக்குப் பெருமை அதிகம்' என்று பூரிப்புடன் புகன்றார். தமிழக அரசின் சார்பில் தமிழரசு' என்று ஒரு மாதமிருமுறை இதழ் வெளிவரும் என முதல்வர் கூற்றுக்கிணங்க, ஒர் அழகிய விளம்பரம், "விடுதலை’ முகல்பக்கம் காணப் பெற்றது 15-6-70 அன்று. பெரியார் கொட்டாம்பட்டியில் 5-ந் தேதி பேசினார்: "ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது முட்டாள் தனமான பேச்சு. ஒரு கடவுளை நம்புவதால் ஏற்படும் முட்டாள் தனந்தான் ஆயிரம் : கடவுளை நம்புவதாலும் ஏற்படுகின்றது. ஒன்றே குலம் ஒருவனே தேவன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கையாயிருக்காது. தேர்தலில் ஒட்டு வாங்குவதற்காகச் சொல்லப் பட்டதாயிருக்கும்’ என்று மிக்க நம்பிக்கையோடு சொன்னார் பெரியார், கோவையை அடுத்த ஆலந்துறையில் 7-ந் தேதி ஒரு திருமண விழாவில் பேசும்போது, அங்கு விளக்கேற்றி வைத்திருந்ததாலோ என்னவோ, அதைப் பற்றிக் குறிப் பிட்டார். யாரோ விளக்கை லட்சுமி என்று சொல்லி விட்டார்கள். அதை நம்புகின்ற மக்கள், அது லட்சுமி என்பதற்காக, மன விட்டில் மட்டுமல்லாமல், பிணத் தருகிலும் கொளுத்தி வைக்கிறார்கள். சரி, நான் கேட்கிறேன்; இந்த மணமகனுக்கோ, அல்லது மன மகளுக்கோ தெரியுமா, விளக்கு ஏன் வைக்கிறார்கள் என்று?’ பெரியாரின் கேள்விக்கு என்ன பதில்!
பக்கம்:தந்தை பெரியார்.pdf/682
தோற்றம்