645 சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்ட பத்தில் காஞ்சி மணிமொழியார் தலைமையில், 18-ந்தேதி, நாவலர் பொன் விழா மலரைப் பெரியார் வெளியிட்டு உரையாற்றினார். "நாவலர் நெடுஞ்செழியன் அண்ணா வக்கு அடுத்த பேச்சாளர். புள்ளி விவரங்களை ஏராளமாக அள்ளி வீசுவார். ஒழுக்கத்தில் குற்றம் கூற முடியாதவர். இவர் நூறாண்டுக்கு மேலும் வாழ்க என்று வாழ்த்துகிறேன். தம்பியும், இவரும் படித்து முடித்தவுடன், வேலைக்குப் போக விரும்பாமல், என்னிடம் வந்து பொதுத் தொண்டு செய்ய விரும்புகிறோம் என்றார்கள். ஆனால் நாவலரிடத் தில் இப்போது எனக்குப் பிடிக்காதது, தமிழைப் பயிற்சி மொழி ஆக்குகின்ற திட்டந்தான். நீங்கள் என்னதான் செய்தாலும் இங்கிலீஷின் இடத்தைத் தமிழால் நிரப்ப முடியுமா? நல்ல வண்ணம் சிந்திக்க வேண்டும். மற்றபடி என்னைப் பொறுத்த வரையில் தி. மு. க. என்பது தி. க. வின் கிளைதான்!” என்று. அன்புள்ள தந்தை பெரியார் அவர்கட்கு வணக்கம். சுற்றுப் பயணம் தமிழகத்திற்குப் பயன்படும் வகையில் அமைந்துள்ளது. தங்கள் நலமும் நண்பர்கள் நலமும் அறிய ஆவல், அன்புள்ள மு. கருணாநிதி-12-7-70ல் ஆம்ஸ்டர் டாமிலிருந்து எழுதப்பட்ட இந்தக் கடிதம், 21-ந்தேதிதான் சென்னையில் கிடைத்தது. அன்றே பிற்பகல் 2-30 மணிக்கு, அழகிய அய்ரோப்பிய உடையில், சென்னை வந்து இறங் கினார் முதல்வர் கலைஞர். "பழைய காங்கிரசும், இராஜாஜியின் சுதந்தராக் கட்சியும் இப்போது ஒன்று சேர்கிறார்கள். இந்திராவை எதிர்ப்பது என்ற போர்வையில், தி. மு. க. ஆட்சியை ஒழிக்கவே இவர்கள் மறைமுகமாகக் கூட்டு சேர்ந்துள்ளனர். தன் ஜாதி நலத்துக்காக ஆச்சாரியார் தி. மு. க. வை எதிர்க் சூறார், டில்லித் தலைமைக்குக் கட்டுப்பட்டுக் காமராஜர் தி. மு. க, வை எதிர்க்கிறார்’ என்று பெரியார் அறிவித்த கருத்து "இந்தியன் எக்ஸ்பிரஸ்” ஏட்டிலும் இடம் பெற்றது.
பக்கம்:தந்தை பெரியார்.pdf/688
தோற்றம்