649 விடுவோமே! அடுத்த முறை இதே தி. மு. க. ஆட்சியில் நானே கடப்பாரை எடுத்துக் கோயிலை இடிக்கிறேனா இல்லையா, பாருங்கள்' என்று முழங்கினார் தந்தை பெரியார், செப்டம்பர் மாதம் 12, 13 நாட்களில் சென்னை அசோக் நகரில் மாநில சுயாட்சி மாநாடு நடத்த தி. மு. க. ஆவண செய்து வந்தது. இதற்கிடையில் 9-9-70 அன்று கலைஞர் அமைச்சரவையில் அமைச்சர்களாயிருந்த கே. ஏ. மதியழகன், மா. முத்துசாமி, கா. வேழவேந்தன் ஆகிய மூவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டதாகச் செய்தி வந்தது. காரணம் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. பதவி இழப் பினும், அன்னார் மூவரும் கழகப் பணிகளில் தொடர்ந்து ஈடு பட்டனர். இவர்களது பதவி நீக்கம் பற்றி, முதல்வர், தந்தை பெரியாரிடம் முன்பே கலந்ததாகச் சில வட்டாரங்கள் கருத்தறிவித்தன கலைஞர் தலைமையில் அஜாய் மூக்கர்ஜி மாநில சுயாட்சி மாநாட்டைத் தொடங்கி வைத்தார். 'தலைவரை உருவாக்கிய தலைவர் பெரியார் இப்போது பேசுவார்' என்று, 13-ந் தேதி, கலைஞர் அறிவித்ததும், பெரியார் பேசினார்:- "சுதந்திரம் பெற்று 23 ஆண்டுகள் கழிந்த பின்பு ஒர் மாநாடு கூட்டி, எங்களுக்கு இன்னும் சுதந்தரம் கிடைக்கவில்லையே என்று கேட்கிறோம். இது வெட்கக் கேடான நிலைமை அல்லவா? இந்த மாநாட்டின் கோரிக்கைகள் விரைவில் வழங்கப்படாவிட்டால், இன்னும் மூன்றே ஆண்டுகளில் தமிழ் நாட்டுக்கு மாநில சுயாட்சி அல்ல; முழுச் சுதந்தரம், விடுதலை, கிடைத்தே திரும் அதை யாரும் அப்போது தடுக்க முடியாது’ என்றார் பெரியார். நாவலர் நெடுஞ்செழியன் மேல்நாடுகள் சுற்றுப்பயணத்துக் காக 17-9-70 அன்று மாலை புறப்பட்டார். பின்னர் இவர் 28-10-70 இரவு 10மணிக்குத்தான் சென்னை திரும்பினார். இந்த ஆண்டு பெரியார் 95-வது பிறந்த நாள் விழா மதுரைத் திருநகரில் பெருவிழாவாகக் கொண்டாடப் பட்டது, 17. 9-10 அன்று. பெரியாரும் நேரில் கலந்து கொண்டார். இந்த ஆண்டும் விடுதலை மலரில், பெரி
பக்கம்:தந்தை பெரியார்.pdf/692
தோற்றம்