650 யாரின் அறிவுக்கு விருந்தான சில கட்டுரைகள் வழக்கம்போல் இடம்” பெற்றன. பிறந்த நாள் செய் தி, வேலைத் திட்டம் ஆகியவை தரப்பட்டன:- 'என்னுடைய 91 வ ஆண்டு என்க்கு உற்சாகமாகவே கழிந்ததுடன், மனச்சலிப்பு அடையவேண்டிய அவசியமில்லாமல், வாழ்நாள் நீண்டால், மேலும் பல முன்னேற்றகரமான காரியம் செய்யலாம். போல் தோன்றுகிறது. அதாவது கடவுள், மதம், சாதி முதலிய விஷயத்தில் மக்கள் எந்த அளவு வேண்டுமானாலும், மாறுதலடையப், பக்குவமாய், மாறுதலுக்கு இணங்குபவர் களாய் இருக்கிறார்கள் என்றே காணுகிறேன். இந்த நிலை தான் எனது உற்சாகத்திற்கும், மேலும் இருந்து தொண்டு செய்யலாம் என்ற நம்பிக்கைக்கும், அவாவிற்கும் காரணம் ஆகும். நமது நாட்டு ஆட்சியானது பகுத்தறிவு ஆட்சி என்ப தோடு எந்தவித மாறுதலுக்கும் எவ்வளவு தூரம் துணிந்து செயலாற்றுவதற்கும் துணிவுள்ள ஆட்சியேயாகும். இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு பொதுவாகவே மக்கள் வாழ்வில் சுபீட்சம் ஏற்பட்டிருக்கிறது. மக்கள் எண்ணத்தில் பெருத்த: முன்னேற்றத்தையும் அடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் நான் எனது 92-வது ஆண்டுச் செய்தி யாக மக்களுக்குத் தெரிவித்துக்கொள்வது என்னவென்றால் இந்த ஆட்சியை இன்னும் ஒரு பத்தாண்டுக்குப் ப்ாதுகாத்து வரவேண்டும் என்பதேயாகும். இந்த நிலையில் நமது நாட்டு ஆட்சிக்கு ஏதாவது மாறுதல் ஏற்படுமானால் காமராஜர் ஆட்சி ஒரு நாளும் அந்த இடத்திற்கு வராது. மற்றெது வருமென்றால், பார்ப்பனர் ஆட்சி-இராஜாஜி. ஆதிக்க ஆட்சிதான்-வரும். அதுவோ, வேறு எதுவோ, வந்தாலும் பழிவாங்கும் ஆட்சியாய்த்தான் இருக்கும்! அல்லது, அசல் காலித்தன, பலாத்காரத் தாண்டவ ஆட்சி யாகத்தானிருக்கும். இதில் யாருக்கும் சந்தேகம்வேண்டாம். இதை எனது 91ஆண்டு அனுபவச் செய்தியாகக் கூறுகிறேன்! நான் எனது 92-வது ஆண்டின் வேலைத் திட்டமாகப் பார்ப்பனப் பத்திரிகைகளை நம் மக்கள் பகிஷ்கரிக்கும்படிச்
பக்கம்:தந்தை பெரியார்.pdf/693
தோற்றம்