உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/695

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

652 தந்திருந்த பெரியார், "பார்ப்பனப் பத்திரிகைகள் வாங்கும் தமிழர்களைத் தடுத்து நிறுத்துங்கள். இந்த என் சிலை உங்களைப் பார்த்துப் பேசுவது அதுதான்!” என்றார். 25-ந் தேதி திண்டுக்கல்லில், குன்றக்குடி அடிகளார் தலைமையில் பெரியார் சிலையைத் திறந்த முதலமைச்சர் கலைஞர், 'பெரியார் எப்போதுமே தேவை” என்றார். பெரியார் பேசும்போது, பகுத்தறிக் கொள்கைகள் நாடெல்லாம் பரவிட, தெருவுக்குத் தெரு ஒரு பகுத்தறிவாளர் சிலை நிறுவப்பட வேண்டும்’ என்றார். திருச்சியில் பெரியார் கல்வி நிறுவனங்களின் சார்பில் 26-ந்தேதி நடைபெற்ற நிறுவனர் நாள் விழாவில், பெரியார், வீரமணியுடன், அமைச்சர்கள் க. ராஜாராம், செ. மாதவன் ஆகியோர் பங்கேற்றனர். 27-ந்தேதி திருச்சி சிந்தனையாளர் கழகச்சார்பில் பெரியாருடன், அமைச்சர் என்.வி.நடராசன், ஏ.என். சட்டநாதன் ஆகியோர் பேசினர். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பிற்குக் கட்டுப்பட்டே, பிற்படுத்தப் பட்டோருக்குக் கல்வி-உத்தியோகங்களில் 49 சதவீதம் ஒதுக்கிட, இப்போதே இடமிருப்பதாகத் தாம் கருதுவதாகப் பெரியார் தெரிவிக் கவும்; அமைச்சர் என். வி. என். அவ்வாறாயின் பெரியார் கருத்தை ஏற்பதாக அறிவித்தார். (பின்னர் கலைஞர் அவ்விதமே ஆணை பிறப்பித்தது வரலாறாகும்!) பன் மொழிப் புலவரும் தனித்தமிழ்ச் சான்றோரும் சிறந்த ஆராய்ச்சி நிபுணருமான ஞா. தேவநேயப் பாவாணர்,அன்று திருச்சியில் பெரியாரைப் பற்றி ஒரு வெண்பா இயற்றிப் பாடினர்: பைந்தமிழ் நாட்டுப் பகுத்தறிவுத் தங்தையென அய்ந்துகண்டத்தும் அரும்பெயரை-மைந்துடனே தொண்ணுாற் றிரண்டாம் தொடராண்டும் காட்டிய ே எண்ட்ேடி இங்கே இரு! வானொலிநிலையங்களிலும் இனி மதராஸ்என்பதற்குப் பதிலாகச் சென்னை என்றே சொல்லப்படுமென முதல்வர் கலைஞர் 29.9.70 அன்று அறிவித்கார். கல்வியிலும் வேலை