உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/697

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

654 முதல், பார்ப்பணப் பத்திரிகைகளைப் பகிஷ்கரிப்போர் பட்டியல் தொடர்ச்சியாக விடுதலை'யில் வெளிவந்தது. நாள் தோறும் வளர்ந்து வந்த இந்தப் பட்டியலின் புள்ளி விவரம் படிக்கச் சுவையானதாகும்:-23-11-70-ல் 1005 பேர், 23.12-70-ல் 1503 பேர், 17-1-71-ல் 2014 பேர், 22-2-71-ல் 2509 பேர், 20-3.71-ல் 3000 பேர், 4.4-71-ல் 3500 பேர், 15.4.71-ல் 4014 பேர், 25-4.71-ல் 4518 பேர், 7.5-71-ல் 5037 பேர், 24.5.71-ல் 5528:பேர், 15-6-71-ல் 6001 பேர், 12-7.71-ல் 6501 பேர், 9-8-71-ல் 7005 பேர், என்று நீண்டுகொண்டே போயிற்று! 28-10.1970 பிற்பகல் 2-15 மணிக்குப் பெரியார், மணியம்மையார், வீரமணி, என்.எஸ். சம்பந்தம் ஆகியோர் வேனிலும், தஞ்சை கா. மா. குப்புசாமி முதலியோர் இன்னொரு தனிக்காரிலும் பம்பாய் புறப்பட்டனர். சிவ சேனையின் பிறப்பிடத்திலேயே-சிங்கத்தின் குகையிலேயே நுழைந்து, அதன் பிடரி மயிரைப் பிடித்துக் குலுக்குவது போல்-அண்ணா பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ளப், பெரியார் பெரும்படை அணி திரண்டது. பம்பாயில் வழி யெங்கும் வரவேற்புகள். மேடையில் பெரியாருக்கு மாலைகள் சூட்டி முடிக்கவே. 30 நிமிடங்கட்கு மேலா யிற்று. பி. என். ராஜ்போஜ் தலைமை ஏற்றுப், "பெரியார் நாட்டில் செய்த பெரிய புரட்சிகரமான பணிகளால், தமிழ் நாட்டில் இந்து மதத்தின் பிடி தளர்ந்து, அதன் காரணமாக இப்போது அங்கே அண்ணாவின் ஆட்சியும், அடுத்துக் கலைஞர் கருணாநிதியின் ஆட்சியும் நடைபெற முடிகிறது” என்றார். டாக்டர் பொராலோ பெரியார் படத்தைத் திறந்து வைத்து,இந்தியாவிலேயே சிறப்பான ஆட்சி நடப்பது தமிழ் நாட்டில் மட்டுந்தான் எனப் புகழ்ந்தார். தொல் காப்பியன், நன்னிலம் அ. நடராசன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். பெரியார் பேசும்போது, இந்திய வரலாற்றில் வேறெந்த ஆட்சியாளரும் சாதிக்காத அருஞ்சாதனைகளைச் சாதித்துக் காட்டியவர் அறிஞர் அண்ணா. ஒரு பகுத்தறிவு