656 பற்றி என்ன நினைப்பார்கள்?' என்று பெருந்தன்மை துலங்கப் பேசினாராம். г. பெரியார் பம்பாய் சுற்றுப்பயணம் முடித்துக்கொண்டு, 8-11-70 சிவகங்கை நிகழ்ச்சிக்குச் சென்றார். பண்ணுருட்டி யில் பேசும் போது, தி.மு.க. ஆட்சி நடப்பதால்தான் நாம் இப்போது நாடெங்கும் பகுத்தறிவாளர் மன்றங்கள் திறக்க முடிகின்றது. வேறு ஆட்சியாக இருந்தால் இந்த நேரம் தடை போட்டிருப்பார்களே' என்றார் பெரியார், :இராஜாஜி (ஒப்பாரி) அழுகை' என்ற மகுடத்தின் கீழ் * சுதந்தரமும் ஜனநாயகமும் இந்திய மக்களுக்கு உயிர்நாடி. இந்திராகாந்தி உதவியுடன் கம்யூனிசம் இவை இரண்டுக்கும் பேராபத்தை விளைவிக்கிறது என்று சுயராஜ்யா' இதழில் இராஜாஜி பிரலாபிக்கிறார். இவருடைய அழுகையை நாம் மதிப்பதா? கம்யூனிசம் வெற்றி பெறப் பாடுபடுவதே நம் கடமையாகும். அதற்காகவே நாம் இந்திராவை ஆதரித்திட வேண்டும் (பார்ப்பனர் தவிர்த்து). எவ்வளவு பெரிய திருட்டு அயோக்கியனும், மேல் ஜாதிக்காரனாக, எஜமான னாக, முதலாளியாக எப்போதும் இருக்கவேண்டும் என்பது தான்.இராஜாஜியிசமா?’ எனப் பெரியார் வினவினார். நாடெங்கும் பகுத்தறிவாளர் கழகம் ஏற்படுத்துங்கள். கொள்கையை அனுசரிப்பதில் கண்டிப்பாயிருங்கள். நெற்றிக் குறி மதச்சின்னம் அணியாதீர்கள். உறுப்பினர் குறைவா னாலும் பகுத்தறிவாளர்களையே உறுப்பினர்களாய்ச் சேருங்கள்-என்று பெரியாரின் பெட்டிச் செய்தி வேண்டு தோள் வெளியாயிற்று. 30-11-70-ல் 'தமிழர் நிலை' என்ற பெரியாரின் தலையங்கம் ஆழ்ந்த கவலையோடும் பொறுப் போடும் திட்டப்பட்டிருந்தது:-'தமிழ் நாட்டில் இன்று: தன் காலில் நிற்கும் தமிழன்கட்சி ஒன்றுமில்லை.காமராஜரும் நிஜலிங்கப்பாவும் தங்கள் கட்சியோடு போய் இராஜாஜி யிடம் சரணடைந்து விட்டார்கள். நடிகர் ஒருவரை மக்கள் கடவுளாகக் காண்கின்றார்களாம். தி. மு. கழகத்துக்குக் கஷ்டம் வருமானால் நிச்சயமாக அது வெளியிலிருந்து வராது. என்னதான் திராவிடர்கழகத்தை அவர்கள் மதிக்கா
பக்கம்:தந்தை பெரியார்.pdf/699
தோற்றம்