661 நேராமல் பார்த்துக் கொள்ளுவோம். நமக்கு இப்போது முக்கியமானது இந்த இராஜாஜி-காங்கிரஸ்கூட்டு ஒழிந்தால் தான், மான வாழ்வு ஏற்படும். தவறியும் அவர்கள் வெற்றி பெற இடந்தரக்கூடாது. தாம் ஆட்சியில் அமர்த்திய இந்திராகாந்தி அம்மையாரையே இப்போது காமராஜர் எதிர்ப்பது ஏன்? சமுதாயப் பொருளாதாரத்துறையில் அந்த அம்மையார் ஏற்படுத்திய மாற்றந்தானே? அதேபோல இங்கேயும் தாம் ஏற்படுத்திய தி.மு.க. ஆட்சியை ஆச்சாரி யாரே எதிர்ப்பது ஏன்? சமுதாய பேதங்களைப் பாதுகாப் பதற்குத் தி.மு.க. இணங்காததுதானே காரணம்! இதைப் பொதுமக்கள் நல்லவண்ணம் சிந்திக்க வேண்டும்என்பதாகப் பெரியார் எழுதிவந்தார். உத்தரப்பிரதேச மாநிலத்தில், முன்பு பெரியாரின் ராமாயணப் பாத்திரங்கள் நூலைப் பறிமுதல் செய்தது செல்லாது என அந்த மாநில உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்த செய்தி 20.1-71 அன்று பிரசுரமாயிற்று. ஜனவரி 23, 24 தேதிகளில் தமிழ்நாடு இருபெரும் மாநாடுகளை ஒருங்கே கண்ணுற்றது. சென்னை அசோக நகரில் தி.மு.க. சிறப்பு மாநாடு,ஊர்வலம். வேட்பாளர் பட்டியல் இங்கு வெளியிடப் ட்டது. பிரச்சினைகள், வழக்குகள், வாதப் பிரதிவாதங் களுக்கு நிறைய இடமளித்த சேலம் மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாடும் இந்தத் தேதிகளில் நடந்தது. சேலம் ரத்தின சாமி பந்தலில் ரோசு அரங்கில் மாநாடு. 1; மைல் நீள முள்ள பிரம்மாண்டமான ஊர்வலம், கருங்கடல் அலைகள் பெருங்குரல் எடுத்து அருங்காட்சி சமைத்திட ஒருங்கே திரண்டதோ என 50,000 கருஞ்சட்டை வீரர்களின் அணி வகுப்பு, ஊர்வலத்தில் தீமிதி, அலகு குத்திக்கொள்ளு தல், கரகம், காவடி ஆட்டம் முதலியவை. 10 அடி உயர முள்ள ராமன் எரிக்கப்பட்ட ராவணலீலாக் காட்சியை 2 லட்சம் மக்கள் கண்டு களித்தனர், ஊர்வலத்தில் மத நம்பிக்கையைப் புண்படுத்தும் காட்சிகளை எடுத்துச் செல்ல வேண்டாமெனக் காவல்துறை அதிகாரிகள் கூறியபோது, எழுத்து மூலமாக அப்படித் தடைபோடும் உத்தரவு தரக்
பக்கம்:தந்தை பெரியார்.pdf/706
தோற்றம்