669 பார்ப்பனர் தவிர மற்ற ஜாதிகளுக்குப் பிரதிநிதிகள் இருக்க கிறார்கள். சைவருக்கு இரண்டு, அதிகம் தான். என்றா லும் மொத்தத்தில் பரவாயில்லை. வஞ்சனையாக ஒன்றுமே செய்யப்படவில்லை என்று திருப்தி கொள்ளலாம். இந்த நேரத்தில் கலைஞர் தலைவராயில்லாமல் வேறு யாரிருந்: தாலும், நாம் ஒழிந்திருப்போம். இதைப் பற்றி எனக்குத் தெரிந்த அளவு விஷயங்கள், மற்றவர்களுக்குத் தெரிந்திருக் காது! இது போதாது. கலைஞர் கட்சியின் சர்வாதிகாரி யாகவே ஆக்கப்படவேண்டும். அவர் இப்போது செய்துள்ள எல்லாக் காரியங்களையும் நான் மனநிறைவோடு ஏற்றுக் கொள்ளுகிறேன். என்னைப் பொறுத்தவரையில் தனியே பார்ப்பனர் மீது எந்த வெறுப்புணர்ச்சியுமில்லை. அவர்கள். உயர்ந்தவர்கள் என்கிற மனப்பான்மையை ஒழிக்க வேண்டும். என்பது தான்! மற்றபடி இனி கடவுள் ஒழிப்பிற்காக 5,000 10, 000 பேர் சிறை செல்ல, சிலர் கொல்லப்படத் தயாரா குங்கள்! என் அடுத்த அறிவிப்பிற்காகக் காத்திருங்கள்’ என விளக்கியிருந்தார் தந்தை பெரியார். இவரைப்பற்றி முதல் அமைச்சரின் கருத்து என்ன? என்று, நிருபர்கள்,பதவி ஏற்ற வுடனேயே கலைஞரிடம் கேட்டனர். தந்தை பெரியார் சமூக சீர்திருத்தப் பணிபுரிபவர். அவரது சமுதாய சீர்திருத்த வேலையில் அரசு தலையிடாது. யாருடைய மனமாவது புண்படுவதாகப் புகார் கூறப்பட்டால், அப்போது அரசு கண்காணிக்கும்’ என்றார் கலைஞர் 15-3-71 அன்று. மாபெருந் தலைவரான காமராஜர், நாகர் கோயில் தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டார். தமிழ் நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய நான்கு தென்மாநிலங் களுக்கும் சிண்டிகேட் காங்கிாசின் ஒரே பிரதிநிதி அவர்தான். அது மட்டுமல்ல சிண்டிகேட், சுதந்தரா, ஜனசங்கம், சம்யுக்த சோஷலிஸ்ட் கட்சிகளின் கூட்டணிக்கே ஏகப்பிரதிநிதியும் அவரே தான். சேலம் நகராட்சியிலும், பாள்ையங்கோட்டை நகராட்சியிலும் உள்ள படிப்பகங்களில், பார்ப்பனப் பத்திரிகைகளை வாங்குவதில்லையென முடிவெடுக்கப்பட்டது 26-3-71 முதல் இது தவறு எனச் சென்னை உயர்.நீதிமன்றத்தில்
பக்கம்:தந்தை பெரியார்.pdf/714
தோற்றம்