671 புதுச்சேரி ராஜ்யத்திலும் சட்டப் பிரகாரம் செல்லுபடி யாகுமெனச் சட்ட ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஏப்ரல், மே, மாதங்களில் பெரியார் இடையறாத சுற்றுப் பயணம் மேற்கொண்டார். மதுரையில் பகுத்தறிவாளர் கழகம் துவங்கப்பட்டபோது, பெரியார் முன்னிலையில் பெண்கள் ஒன்றுகூடி, சேலம் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டுத் தீர்மானங்களை வரவேற்பதாகக் கூறினர். பார்ப்பன ஏடு களுக்கும் அங்கே தீயிடப்பட்டது. - கவிஞர் சலகண்டபுரம் ப. கண்ணன் (முன்னாளில் ஜே.பி. கிருஷ்ணன்) 21-4-71 இரவு 9.30-க்கு மறைந்தார். ஆரம்ப காலந்தொட்டுக் கடைசிவரை கொள்கைக்காகப் பாடுபட்டவர். இலட்சியவாதி. சிறந்த சீர்திருத்த எழுத் தாளர்' எனப் பாராட்டி இரங்கலுரைத்தார் பெரியார். பி. சபாநாயகம், அய். ஏ. எஸ். தலைமைச் செயலாளராக வும், சி. ஜி. ரங்கபாஷ்யம் அய். ஏ. எஸ். மின்வாரியத் தலைவ ராகவும் 8.4.71-ல் நியமிக்கப்பெற்றனர். புரட்சிக் கவிஞரின் 80-வது பிறந்த நாளை ஒட்டி 29-4-71அன்று புதுவை அரசு விடுமுறைவழங்கியது. பாரதிதாசன்இல்லத்தை அரசுடைமை ஆக்கி அங்கே நூலகமும் அமைத்தது. 1-5-71 முதல் மதுரை நகராட்சி, மாநகராட்சி அந்தஸ்து பெற்றது. மதுரைக் கார்ப்பரேஷன் முதல் மேயராக எஸ். முத்து நியமிக்கப் பெற்றார். (சென்னை கார்ப்பரேஷன் முதல் மேயர் குமார ராஜா M.A. முத்தையாச் செட்டியார்) 2-5-71 அன்று இராஜாஜி வீட்டு முன்னர், அவர் பென்ஷன் வாங்கக் கூடாது; தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 2-5-71-ல் தஞ்சையில் பெரியார், பகுத்தறிவாளர் கழகம் தொடங்கி வைத்தார். 7-ந்தேதி சென்னையில், பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் அமைச்சரவைக்குப் பாராட்டுவிழா பெரியார் திடலில் நடைபெற்றது. முதல்வர் கலைஞரும் அமைச்சர்களில், நாவலர் நெடுஞ்செழியன், அன்பில் தர்மலிங்கம், சத்தியவாணிமுத்து ஆகியோரும் பகுத்தறிவாளர் கழகத்தின், உறுப்பினர் ஆயினர்.
பக்கம்:தந்தை பெரியார்.pdf/716
தோற்றம்