உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/717

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

672 திருவாரூரில் 15-11 அன்று பகுத்தறிவாளர் மாநாடு; தலைவர் வீரமணி; திறப்பாளர் உலகநம்பி எம். ஏ. பி. எல். எம். பி. ரெங்கராக திடலில், சிங்கராயர் பந்தலில், முத்துக் கிருஷ்ணன் அரங்கில்! மறுநாள் திராவிடர்கழக மாநாடு பெரியார் தலைமையில்; T. W. சொக்கப்பா எம். ஏ. எல். டி. திறப்பாளர். வி. எஸ். பி. யாகூப் மன்றத்தில் பகுத் தறிவுப் புத்தகக்காட்சி, ஓவியக் காட்சி நடைபெற்றது. 16-5.71 அன்று மாபெரும் ஊர்வலம் புறப்படத் தயாரா யிருந்த நேரத்தில், பெரியார் தங்கியிருந்த முசாபுரி பங்களா வுக்கு, மாவட்ட ஆட்சித் தலைவர் டி. வி. அந்தோணி அய்.ஏ.எஸ்.(முன்னாள் தலைமைச் செயலாளர்டி.ஏ.வர்கீசின் மகன்) வந்து, பெரியாரைச் சந்தித்து, ஊர்வலத்தில் இராமன், சீதை ஆகிய உருவங்களை எடுத்துச் செல்லக் கூடாது, என்றார். அதில்லாமல் எங்கள் கொள்கை நிறை. வேறாதுங்களே என்றார் பெரியார். அப்படியானால் ஊர்வ லத்தை அனுமதிக்க முடியாதே என்றார் கலெக்டர். எழுத்து மூலமான உத்தரவு தருவீர்களா என்று பெரியார் கேட்க வும், அங்கேயே டைப் செய்து கையெழுத்திட்டு, மாவட்டக் கலெக்டர் மற்றும் மாஜிஸ்டிரேட் என்கிற தகுதிகளில், திராவிடர் கழக ஊர்வலம் நடத்த அனுமதி மறுப்பதாக ஆணை பிறப்பித்து, நகலைப் பெரியாரிடம் தந்தார். மேலிடத்தின் தொடர்பு இல்லாமல் இவ்வளவும் நடை பெறாது என யூகித்தார் பெரியார்! அப்போது பெரியார் கூறிய ஒரு பழமொழியைக் கேட்டு ஆத்திரமாயிருந்த தோழர்களும் சிரித்துவிட்டனர். என்ன செய்வது. மாமியாருக்குத் தொடையிலே புண். மருமகன்தான் டாக்டர்!’ என்றார் பெரியார். தங்கும் விடுதிக்கு வெளியே உணர்ச்சிப் பிழம்புகளாய்க் கொதித்துக் கொண்டிருந்த கருஞ்சட்டையினரைத் தாமே அமைதிப்படுத்தி, ஊாவலம் ர்த்து என அறிவித்து, நேரே மாநாட்டைத் துவக்கினார். இன்னும் 15 நாளில் இராமாயணம் தடைசெய்யப்பட வேண்டும். தவறினால் விபச்சாரி சீதை, குடிகார ராமன் குத்திர சம்பூகன் வெட்டிக் கொல்லப்படுதல்-இந்தக்