673 காட்சிகள் தமிழ் நாடு முழுவதும் ஊர்வலமாக எடுக்கப் படும்' என்ற ஏகமனதான ஒரு தீர்மானம் எழுச்சி மயமாக நிறைவேற்றப்பட்டது, திருவாரூரில் 16-5-71 அன்றைய தினம்! அடுத்த 17, 19 தேதிகளில் விடுதலை'யில் ஆசிரியர் தலையங்கம் மிகுந்த வேதனையுடன் தீட்டப்பட்டிருந்தது. 13-ந் தேதி புலவர் குழந்தையின் இராவண காவியம் நூல் மீதிருந்த தடை, அரசால் நீக்கப்பட்டது. பத்திரிகை நிருபர்கள் கேட்டபோது, முதல்வர் கலைஞர், இனியும் சேலம் நடந்தால் 'திருவாரூர் நடக்கும் என்றார்; அதாவது, இராமன் உருவம் ஊர்வலத்தில் இழிவு செய்யப் படுமானால், தி. க. ஊர்வலமே தடை செய்யப்படும் என்ற பொருளில் அரசின் இந்தப் போக்கு விரும்பத்தக்கதல்ல என்ற கசப்பான உண்மையைச் சுட்டிக் காட்ட வேண்டியது நமது கடமையாகிறது. நாம் நடத்தும் ஊர்வலம் எதிரி களைப் புண்படுத்த அல்ல; நம்மவர்களுக்கு ஏற்பட்டுள்ள புண்ணை ஆற்றவே சேலம் நடந்தால் திருவாரூர் நடக்கு மென்று முதல்வர் கூறிவிட்டதாகச் சிண்டு முடிவோர் ஏமாறுவர். அரசு கடமையாற்றட்டும். நாமும் செய லாற்றுவோம். அடுத்து ஒரு மாநாடு கூட்டி, வேலைத் திட்டம் வகுப்போம்!” என்றார் வீரமணி. 21-ந் தேதி பெரியாரோ-'நான் தி. மு. க. அமைச்சர்களை மதிக்க வில்லையா? பிறகேன், இந்த முடிவு? தி. க.வை ஒடுக்கும் திட்டமா? ஆட்சியின் காரியத்துக்காக நான் இவற்றைக் கைவிட முடியுமா? அப்படிச் செய்தால் திராவிடர் கழகத்தை நானே கொல்லுபவன் ஆவேன்!" என்று மனம் பொருமினார். அரசின் போக்கைக் கண்டித்துத் திராவிடர் கழகத் தோழர்கள் மனங்குமுறி ஆத்திரத்துடன், இரத்தக் கண்ணிர் வடித்து, எழுதிய எண்ணற்ற கடிதங்கள் :விடுதலையில் ஆசிரியருக்கு” என்ற பகுதியில் தினந் தோறும் நிறைந்தன. g இ2-5-7 நாத்திகர் மாநாடு; தலைவர் எஞ்சினியர் கே. எம். சுப்பிரமணியம் பி. இ. திறப்பாளர் ஜி. டி.நாயுடு. பெ.-43 *.
பக்கம்:தந்தை பெரியார்.pdf/718
தோற்றம்