674 23-ந் தேதி பார்ப்பனரல்லாதார் மாநாடு. தலைவர் பெரியார்; திறப்பாளர் டி. வி. சொக்கப்பா. திருச்சியில் சிந்தனையாளர் கழகம் நடத்திய இந்த மாநாடுகளில் 'மது விலகைக் விரைந்து நீக்க வேண்டும். சிறுபான்மையினரான முஸ்லீம்கள் மதுவிலக்கு நீடிக்க வேண்டும் என்று சொல்ல உரிமையில்லை. திராவிடர் கழகக் கொள்கைகளை, ஆட்சிக்குச் சென்று சாதிக்கத்தானே திராவிட முன் னேற்றக் கழகம் பிரிந்தது. பிறகென்ன தயக்கம்?' என்று பெரியார் கருத்துரைத்தார். திருக்கோயிலூர் அருகே உள்ள சென்னகுணம் கிராமத்தில் இப்போது தி. மு. க. ஆட்சி யாளர் ஓடாத தேரையெல்லாம் ஒட வைக்கக் காரணம், பார்ப்பானின் செல்வாக்குக்கு அரசு இன்னும் பயப்படுகிறது என்பதுதான். வேதம் ஒழியும் இடத்தில்தானே பேதம் ஒழியும். கடவுளைச் செருப்பால் அடிப்பதால் நமக்கு ஒன்றும் கேடு நேர்ந்து விடாது என்பதற்கு என் வயதே சான்று' ' என்று மொழிந்தார் பெரியார். சேலத்தில் இராமனுக்குச் செருப்படி தந்ததாகப் பெரியார் மீதும் ஒருவர் வழக்குத் தொடர்ந்தார். கோர்ட்டில் 4-6-71-ல் அது தள்ளுபடி செய்யப்பட்டது. 'கல்கியார் கனைக்கிறார்” என்பதாக விடுதலை'யில் 4ந் தேதி ஒரு தலையங்கம்; இராமாயணத்தைத் தடை செய்ய முடியாது என்பதால் இராவண காவியம் நூலுக்கு விதிக்கப் பட்டிருந்த தடையைத் தாம் நீக்கி யதாக முதலமைச்சர் கூறினாராம், என்பதை விளக்கி இராமாயணம் தடை செய்யப்படவேண்டும்-ஏன் என்கிற தலைப்பில் தினம் சில காரணங்களை விவரித்து விடுதலை'யில் பெரியதொரு பெட்டிச் செய்தி அந்த மாத முழுதும் வெளியிடப் பெற்றது. ப்ெரியாரின் உடல் நிலை கருதி அவரைக் குறைவான நிகழ்ச்சிகளுக்கே அழைக்க வேண்டுமென்கிற கருத்திலும் பெட்ரோல் விலை உயர்வாலும் இனிமேல் பெரியாரைப் பொதுக் கூட்டங்களுக்கு அழைப்போர் ரூ 200/-ம், திருமணங் களுக்கு அழைப்போர் ரூ. 250/-ம் அனுப்ப வேண்டுகிறோம் என்பதாக வீரமணி. 66-71ல் அறிவித்தார். பெரியாரின்
பக்கம்:தந்தை பெரியார்.pdf/719
தோற்றம்