6.79 வர்கள்; கி. வீரமணி செயலாளர், அவ்விட்த்திலேயே 2,756 ரூபாய் நன்கொடையும் வசூலாகி விட்டது. கலைஞரால் மறுக்க முடியவில்லை; எனினும் தந்திரமாய் ஒரு நிபந்தனை வெளியிட்டார்-அதாவது நாங்கள் முதலில் பெரியாருக்குச் சிலை அமைப்போம். அதன் பிறகு பார்க்கலாம், என்றார். "சும்மா சொன்னாலோ, கேட்டுக் கொண்டாலோ கூட நான் மறுத்திருப்பேன். அய்யாவின் கட்டளையை என்னால் மீற முடியாது. பதவி ஏற்ற போது நான் சொன்ன எதையும் மறக்கவுமில்லை; ம்ாறவுமில்லை. பெரியார் வழிதான் அண்ணா வழி; அது தான் எங்கள் வழி முறைகளில் சில வேறுபாடு இருக்கலாம்; ஆனால் முரண்பாடு இருக்க முடியாது! நாலாந்தரத்தாரை நாலாந்தளத்தாராக மாற்று வோம், என்று சூளுரைத்தபடியே செய்து காட்டுவோம்அய்யாவின் திருக்கரங்கள் என் கன்னத்திலே பட்டது, என் தாயின் முத்தத்தைவிடச் சிறந்தது. வாழ்நாள் முழுவதும் நினைந்து நினைந்து மகிழ்ந்திருப்பேன்’ என்றார் கலைஞர். இந்தக் கூட்டத்தில் பெரியார், புதிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைப் பற்றிக் குறிப்பிடும் போது, "கடவுள் வாழ்த் துக்குப் பதிலாக இது என்றால், ஒரு முட்டாள் தனத்துக்குப் பதிலாக இன்னொரு முட்டாள்தனம் என்றுதானே அர்த்தம்?' என்றார். - 24-ந் தேதி சென்னையில் நடந்த சலவைத் தொழி லாளர் மாநாட்டில் பெரியார், "இது சாதி அடிப்படையில் இருப்பதால், இந்தச் சங்கம் ஒழியவேண்டும் என்றுதான் நான் சொல்வேன். உங்கள் பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைத்து, வேறு தொழில்களில் ஈடுபடுத்துங்கள்' என்றார். பெரியாரின் 93-வது பிறந்தநாள் விழாவையொட்டி 17-9-71 அன்று பெரியார் சிலை ஈரோட்டில் நிறுவப்படும் என்றும் 26-9-71 அன்று சேலத்தில் வெள்ளிச் சிம்மாசனம் வழங்கப் படும் என்றும் முன்னதாகவே செய்திகள் வெளியாயின. லால்குடி வட்டம் திருமங்கலம் கிராமத்தில், பெரியார் மின் விளக்கேற்றிய போது, "பள்ளிகளில் தருவது போலக் கல்லூரிகளிலும் மதிய உணவு தந்தால், நம் பிள்ளைகள்
பக்கம்:தந்தை பெரியார்.pdf/724
தோற்றம்