680 இன்னும் பலர் உயர் கல்வி பெற முடியும். இப்போது நடந் துள்ள மருத்துவக் கல்லூரிக்கான மாணவர் தேர்ந்தெடுப் பதில் 1,000 க்கு 950 பேர் நம் பிள்ளைகள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர் இந்த ஆட்சியில், என்று மகிழ்ந்தார் பெரியார். 'திராவிடர் கழகம் ஏற்பட்டது கடவுளை ஒழிப்பதற்காக அல்ல; இன இழிவை ஒழிப்பதற்குத்தான். ஆனால் நம் இன இழிவை ஒழிக்கும் பணியில் கடவுள் குறுக்கிடுவதால், அதை ஒழிக்க முற்படுகிறோம்' என்று பெரியார் தாதம்பேட்டை பழுவூரில் கூறினார். துவாரகையிலுள்ள சாரதா பீடம் சங்கராச்சாரியாரின் விழாவில் கலந்து கொள்ளத் துணை ஜனாதிபதி ஜி.எஸ். பாடக் மறுத்து விட்டார்; காரணம், அவர் தீண்டாமையை ஆதரிப்பவர் என்பதால்! இந்தச் செய்தியை விடுதலை’ வெற்றியுடன் பிரசுரித்தது. நாகரசம்பட்டி தன்மானக் குடும்பத்தின் தலைமை மூதாட்டியும் என்.வி. சுந்தரம் சகோதரர்கள், என்.வி. விசாலாட்சி அம்மாள் சகோதரிகள் ஆகியோரின் தாயாரும், என்.எஸ். சம்பந்தம் சகோதரர் களின் பாட்டியாருமான தாயாரம்மாள் 15-8-71 அன்று மறைந்தார். அவரது நினைவு நாளான 29-8-71 அன்று பெரியார்,அம்மையாரின் படத்தினைத் திறந்து வைத்துத், தமது கொள்கையில் அன்னாருக்கிருந்த ஈடுபாட்டை நினைவு கூர்ந்தார். சென்னை பாலர் அரங்கத்தில் கலைவாணர் நினைவுநாள் விழா 4-9-71 அன்று கொண்டாடப் பட்டது. கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், நடிப் பிசைப்புலவர் கே.ஆர். ராமசாமி ஆகியோருக்குப் பகுத் தறிவுப் பாடல்கள் இயற்றித் தந்தவரும், பெரியாரின் நண்பரான உடுமலை முத்துசாமிக் கவிராயரின் சீடரு மான உடுமலை நாராயணக் கவிராயருக்கு, முதல்வர் கலைஞர் 15,000 ரூபாய் பொற்கிழி வ்ழங்கினார். 'உயிரும் மயிரும் இல்ல்ா உருவச் சிண்லகளுக்கு வயிர முடிகள் வேணுமா? வாயும் வயிற்றில்லாச் சாமிக்கு மானியமாகவே வயலும் வாய்க்கர்ல் வேணுமா? என்பது போன்ற அறிவார்ந்த பாடல்களை அவர் :இயற்றித்தர, நடிகமணி.டி.வி. நாராயணசாமி,
பக்கம்:தந்தை பெரியார்.pdf/725
தோற்றம்