உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/726

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

681 கணியூர் கே.ஆர். செல்லமுத்து போன்றார் இயக்க மேடைகளில் இசையோடு முழங்க...வாழ்க, உடும்லைக் கவிராயர் அன்று மாலை, விழாவில், பாலர் அரங்கத் துக்குக் கலைவாணர் அரங்கம் என்று பெயர் சூட்டுவ தாக, முதல்வர் கலைஞர் அறிவித்தார். மறுநாள் காலையே, நியான் சைன் போர்டில், கலைவாணர் அரங்கம் என்ற எழுத்துகள் மின்னக் கண்டனர் மக்கள்! நன்றியுடன் கலைவாணரை நினைந்து மகிழ்ந்தனர்! 5-ந் தேதி Shankar's weekly யில் கலைஞரைப்பற்றிக் கணித்ததில் பார்ப்பனர் ஏமாந்து விட்டனர்' என்ப தாக எழுதப் பட்டிருந்தது, "விடுதலை"யில் எடுத்துக் காட்டப் பெற்றது. 17-9-71 பெரியாரின் 93-வது பிறந்தநாள் விழா பெரியாரைத் தந்த ஈரோட்டில் மரியாதை தெரிவிக்க மக்களுக்குச் சரியான வாய்ப்பு பெரியார் நகரமன்றத்தில் தங்கியிருந்த தந்தைக்கு நல்வாழ்த்துக் கூறி, மாலை சூட்டிட, முதல்வர் கலைஞர், அமைச்சர்கள் ப. உ. சண்முகம், ராஜாராம், கண்ணப்பன் ஆகியோர் காலை 10.30க்கு வந்தனர். மாலையில் எல்லாருக்கும் ஈரோடு நகராட்சி மன்றம் வரவேற்பளித்தது. குன்றக்குடி அடிகளார் தலைமை யில் முதல்வர் கலைஞர் பெரியார் சிலையினைத் திறந்து வைத்தார். அமைச்சர் ப. உ. சண்முகம் 93 நூறு ரூபாய் நோட்டுகளாக, 9,300 ரூபாய் பொற்கிழி, பெரியாருக்கு வழங்கினார். கி. வீரமணி, அமைச்சர்கள் க. ராஜாராம், மு. கண்ணப்பன்ஆகியோரும், பெரியாரும் உரையாற்றினர். சிலையின் பீடத்தில்;ஆத்மா, மோட்சம், நரகம், மறுபிறவி, பிதிர்லோகம் ஆகியவற்றைக் கற்பித்தது யோக்கியமற்ற செயல், இவற்றை நம்புவது மடமை; இவற்றினால் பயன் அனுபவிப்பது வடிகட்டிய முட்டாள்தனம்' என்பதாக ஒருபுறத்தில் பொறிக்கப்பட்டிருந்தது. 19-9-71 திருச்சியில் பெரியார் கல்வி ஸ்தாபனங்களின் நிறுவனர் நாள் விழாவில், இந்த ஆண்டில் அமைச்சர் எஸ். இராமச்சந்திரன் பங்கேற் றார். மறுநாள் பெரியார் சென்னையில், முடிதிருத்துவோர் முன்னேற்றச் சங்க மாநாட்டில் பேசும்போது, போலீஸ்