உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/728

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

683 மான அவதியில் அவர்கள் எதைத்தான் பேசமுடியும்?' என்று கேட்டார். }. - 4-10-71 மதுரையில் கூடிய திராவிடர் கழக மாவட்டக் குழுக் கூட்டத்தில், பெரியார் சிலை அமைப்புக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டு, அப்போதே. 10,562 ரூபாய் நன்கொடை வசூலாயிற்று, மலேசியா வில் பிணம் புதைக்கும் இடத்தில் ஜாதிவேறுபாடு நடை முறையிலிருந்ததை எதிர்த்து, அங்குள்ள் திராவிடர் கழகம் வழக்குத் தொடுத்ததில், 6-10-71 அன்று. வென்று விட்டது! பெண்கள் கூந்தலை வகிடு எடுத்து. இரண்டாகப் பிரித்திடுவதே, மீண்டும் ஒன்றாகப் பின்னும் வதற்காகத்தான்! அது போல தி.க.வும் தி.மு.க.வும் பிரிந்ததே, மீண்டும் பிணைவதற்காகத்தான்' என்று. முதல்வர் கலைஞர் தஞ்சையில் 8-10-71-ல் பேசினாராம். 11-ம் நாள் சென்னையில், தமிழில் Ph. D. என்னும் ஆராய்ச்சிப் பட்டம் பெற்ற பெரும் புலவர் அனைவரும் ஒன்று கூடிக், கலைஞருக்குத் தமிழவேள்' என்ற சிறப்புப்பட்டம் வழங்கினர்; Dr. மெ. சுந்தரம் அமைப் பாளராயிருந்து நடத்தினார் சட்ட மன்றத்தில் ஆப்காரி சட்டத்திருத்தம் 23-ந் தேதி கொண்டுவரப் பட்டபோது, ஆதரவாக 121 வ்ாக்குகள்; சுதந்தரா முஸ்லீம் வீக், சிண்டிகேட் உட்பட எதிர்ப்பான வாக்குகள் 19, - - "எனது 93-வது ஆண்டு பிறந்த நாள் மலருக்கு ஒரு செய்தி வேண்டும் என்று நண்பர் திரு வீரமணி அவர்கள் கேட்டார். 10 ஆண்டுகளாகவே சேதி கொடுத்துக் கொண்டு தான் வருகிறேன். எனது பிறந்த நாள் என்பதே, பிரச்சாரத். திற்கு ஒரு சாதனமாக, ஒர் ஆதாரமாக விளங்குகிறது. என்பது, ஒரு கல்லுப் போன்ற செய்தியாகும். நான் சமுதாய சமத்துவத்திற்குப் பாடுபடுகின்ற ஒரு தொண்டனாவேன். அதாவது சாதி அமைப்பை அடியோடு ஒழிக்கப் பாடுபடுபவன். நான் எனது பிரச்சாரத்தில், கடவுளே இல்லை என்று சொல்லுவதற்காக, அது மூட நம்பிக்கை என்று நல்ல வண்ணம் மக்களுக்கு விளக்குவதற். காகக், கடவுளையே செருப்பால் அடிக்கும்படிச் சொல்லும் அளவுக்கு நான் ஆளாகியிருக்கிறேன். இந்த நிலையிலேயே