684 நான் 92 வயது கடந்து, 93 வயது தோன்றிவிட்டவனாக இருக்கின்றேன். கடவுள் இருந்தால், என்னை விட்டுக் கொண்டு இருப்பானா? உண்மையில் எனது தொண்டு சாதி ஒழிப்புத் தொண்டு தான் என்றாலும், அது நமதுநாட்டைப் பொறுத்தவரையில் கடவுள், மதம், சாஸ்திரம், பார்ப்பன ஒழிப்புப் பிரச்சார மாகத்தான் முடியும் இந்த நான்கும் ஒழிந்த இடம்தான் சாதிஒழிந்த இடமாகும் நாகரிகத்திற்காகச் சிலர் சாதிஒழிய வேண்டும் என்கிறார்கள். அவர்கள் இந்த மேற்கண்ட நான்கையும் ஒழிக்கத் துணிய மாட்டார்கள், சுதந்தர உணர்ச்சியும் அறிவும் ஏற்படாமல் சாதியை ஒழிக்கமுடியாது! மடமைக்கும், அடிமைத் தன்மைக்கும் ஆக்கம் அளித்துச், சாதியை நிலை நிறுத்துவதுதான், சாதியை ஒழியாமல் பாது காப்பதுதான், கடவுள் மதம் சாஸ்திரம் பார்ப்பனர் என்ற நான்குமாகும்! சாதி ஒழியவேண்டும் என்று மனப்பூர்வமாகச் சொல் பவர்கள், இந்த நான்கு ஒழிப்பிற்கும் சம்மதித்தவர்களாகவே தான் இருப்பார்கள். நமது மக்களில் பெரும்பாலோர் இன்று அப்படி ஆகிவிட்டார்கள் என்பதுதான் எனது உற்சாகத்திற்குக் காரணம் ஆகும். எதனால் அப்படிச் சொல்கிறேன் என்றால், சேலம் மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாட்டையும், அதனை அடுத்து நடந்த பொதுத் தேர் தலில் தி. மு. க. பெற்ற பெரிய வெற்றியையும் கொண்டு தான் இப்படிச் சொல்லுகிறேன்! அதாவது, கடவுளைச் செருப்பால் அடித்ததாக 10 லட்சக்கணக்கான பத்திரிகைகள், 10 லட்சக்கணக்கான துண்டுப்பிரசுரங்கள், மாணவர்கள், வக்கீல்கள், அதிகாரிகள், சில பெண்கள், மற்றும் காங்கிரஸ் இயக்கம், சுதந்தரா இயக்கம், ஜனசங்க இயக்கம் முதலிய பலவும் எதிர்ப்பாகப் யாடுபட்டும்; இவ்வளவு பெரிய வெற்றி தி.மு.க. பெற முடிந்தது என்றால், என்னுடைய கருத்து மெய்யாகி வெற்றிபெற்றது என்பது யாருக்கும் விளங்கும்.
பக்கம்:தந்தை பெரியார்.pdf/729
தோற்றம்