685 இனி நமது சாதி ஒழிப்புக்கு, மக்களில் யாரும் எதிர்ப்பு இல்லை என்பது உறுதியான செய்தியாகிவிட்டது. இந்த நிலையில் நான், நமது மக்களை அடிபணிந்து வேண்டிக் கொள்வதெல்லாம், கோயில்களுக்குப் போகாமல் இருக்க வேண்டும்; உற்சவங்களில் கலவாமல், மதப் பண்டிகைகள் கொண்டாடாமல், நெற்றிக்குறி அணியாமல் இருக்க வேண்டும் என்பதே ஆகும்! . r மற்றும் நான் நினைக்கின்றேன்; அண்மையில் ஓர் மாநாடு கூட்டிக், கோயில்களுக்குப் போகிறவர்களை அடி பணிந்து வேண்டிக் கொள்வதன் மூலம், போகாமல் இருக்கச் செய்யலாமா என்று. யோசனை கேட்டுக் காரியத்தில் தொடரலாமா என்று சிந்திக்கிறேன்.: - -இதுதான் பெரியாரின் 93-வது பிறந்த நாள் விண் ணப்பமாகும். 10.10-71 அன்று திருச்சியில் சிந்தனையாளர் கழகம். பெரியாரின் 93-வது பிறந்த நாள் விழாவைக் கொண்டா டியது. கே. எம். சுப்பிரமணியம் பி. இ, கோவிந்தராஜலு, ஆனைமுத்து ஆகியோர் முயற்சியில் பெரியாருக்கு வெள்ளித் தட்டு, வைரமோதிரம் ஆகியவை வழங்கப்பெற்றன, விழாவில் அன்பில் தர்மலிங்கம், சத்தியவாணிமுத்து, எஸ். இராமச்சந்திரன், Dr. வி. சி. குழந்தைசாமி, மா. கி. தசரதன், என். திருஞானசம்பந்தம் பி. இ., கே. வி. சுப்பய்யா, கி. வீரமணி ஆகியோர் பெரியாருடன் பங்கேற். றனர். அன்று மாலை பெரியார், பொதுக் கூட்டத்தில், "நான் இப்போது பதினான்கு அமைச்சராக அல்லவா இருக் கிறேன்' என்றார் இரவு 7-15 மணிக்குத் தி. பொ. வேதா சலனார் மறைந்ததாகச் செய்தி கிடைத்தது.மறுநாள் காலை பெரியார், மணியம்மையார், ரங்கம்மாள் சிதம்பரம், என். எஸ். சம்பந்தம் ஆகியோர் 9 மணிக்குத் தென்னுாரில்: வேதாசலனார் இல்லம் சென்றனர். அன்று மாலை 6 மணிக்கு இடுகாட்டிலும் பெரியார் இரங்கலுரை ஆற்றினார். பழைமையை நினைவு கூர்ந்து மிகவும் வேதனைப்பட்டார்.
பக்கம்:தந்தை பெரியார்.pdf/730
தோற்றம்