689 சுயநலம்-பிறநலம் என்ற இருசொற்களுக்கும் பெரியா ரைப் போல் இதற்கு முன்போ, பின்போ யாரும் விளக்க மளித்திருக்கவே முடியாது. என்ன நயமான வர்ணனைகள்:"சுயநலத்துக்கு அறிவே தேவையில்லை. எந்த ஒரு ஜீவனும் உணவுக்கு அலைவதும், உயிரைக் காப்பதும் இயற்கையே. ஒவ்வொரு உயிரிடத்தும் சில அருமையான, அற்புதமான குணங்கள் உண்டு என்றாலும், அவையெல்லாம் அந்தந்த உயிரினத்தின் சுயநலத்துக்கேதான் பயன்படுகின்றன. மனிதன் மற்ற உயிர்களைவிட வேறாகிப், பகுத்தறிவு உள்ளவன் எனினும், அவனது வாழ்க்கையும் தன்னலம், புகழை, அடிப்படையாய்க் கொண்டே அமைகிறது. மனிதன் தன்னுடைய நலத்தை மட்டுமின்றித் தாய், தகப்பன், பெண்டு, பிள்ளை முதலியோரின் நலத்தைப் பற்றியும் கவலை கொள்கிறான் என்றால், அதுவும் பெரிதும் சுயநலத்தை உத்தேசித்ததே ஆகும். மனிதன் ஏன் தன் மனைவியை அழகுபடுத்துகிறான்? தான் பயன்படுத்தும் மாடு கன்றுகளின் நலத்தை எதற்காகக் கவனிக்கிறான்? தனது நாய்க்கு எதற்காக நல்ல போஷணைகொடுக்கிறான்? எதற்காகத் தான் குடியிருக்கும் வீட்டைப் பாதுகாக் கிறான்? எதற்காகத் தனது பணத்தைப், பொருளைப் பத்திரப்படுத்திப், பெருக்குகிறான்? ஒட்டல்காரன் எதற் காகத் தனது வாடிக்கைக்காரர்களுக்கு நல்ல சாப்பாடு போடுகிறான்? பத்திரிகைக்காரன் எதற்காக நல்ல, அதிசய, புதிய செய்திகளைக் கண்டு பிடித்துப் பிரசுரிக்கிறான்? வைத்தியன் எதற்காகத் தன்னிடம் வரும் நோயாளிகளை யெல்லாம் சவுக்கியப்படுத்த வேண்டுமென்று கவலைப்படு கிறான்? வக்கீல் தன்னிடம் வரும் கட்சிக்காரர்களுக்கு அனுகூலம் ஏற்பட வேண்டுமென்று "பல வழிகளிலும் பாடுபடுவது எதற்காக? தாசிகள் தங்களிடம் வருபவர் களிடம் தங்களுக்குத் காமம் இல்லாவிட்டாலும், எதற்காக மேல்விழுந்து இன்பமளிக்கிறார்கள்? இவர்கள் எல்லாரும் பிறர் நலத்தைப் பேணுவதாக நமக்குக் காணப்பட்டாலும், பெ.-44
பக்கம்:தந்தை பெரியார்.pdf/734
தோற்றம்