உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/737

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

692 கத்தில், 16-11-71-ல் விடுதலை’ எதிர்க்கட்சிகள் திருந்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. பெரியாருக்கும் சேலம் வழக்கில் நோட்டீஸ் அனுப்பு மாறு உயர்நீதி மன்றம் 18-11-11-ல் தீர்ப்பளித்தது. 28-ந்: தேதி திராவிடர் மாணவர் கழகம் துவக்கப்பட்டது. பெரியார் 30-11-11 அன்று பொது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அமைச்சர்களும், புதிதாக மேயரான திருமதி காமாட்சி ஜெயராமனும், பெரியாரைச் சந்தித்து, விசாரித்தனர். சிகாகோவிலிருந்த முதல்வர் கலைஞரிடம் ஆசிரியர்களும், மாணாக்கர்களும் பெரியாரைப் பற்றியும் அன்னாரின் சமூகத் தொண்டு குறித்தும் நிரம்பக் கேட்டு விளக்கம் பெற்றதாக விடுதலை'யில் செய்தி வந்தது. 1971 ஜூன் 7-ந் தேதி முதல், பிற்படுத்தப்பட்டோருக்கு 31 சத வீதமும், தாழ்த்தப்பட்டோருக்கு 18 சதவீதமும் பதவி களைக் கணக்கிடுமாறு 2-12-71ல் அரசாணை பிறப்பிக்கப் பெற்றது. - நமது கடவுள்களாக நாம் கருதிக் கொண்டிருக்கிற எல்லாமே காப்பியடிக்கப்பட்டவை; ஒரிஜினல் அல்ல என்ற பெரியாரின் ஆராய்ச்சி பூர்வக் கருத்துகள், ஆழ்ந்த சிந்தனைக்குரியவையாகும்:- "கடவுள் என்பதற்கு ஒரு சொல் வடமொழியிலும் கிடையாது. தமிழிலும் கிடை யாது. தமிழில் கடவுள் என்னும் இந்தச் சொல் தமிழனுக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்குள் கற்பிக்கப்பட்ட சொல்லே யல்லாமல் பழங்காலச் சொல் என்று கூற முடியாது. இருக் கின்ற இலக்கியங்கள் தொல்காப்பியத்திற்குப் பிற் பட்டனவேயாகும். தொல்காப்பியமும் ஆரியர் வருகைக்குப் பிற்பட்டதேயாகும். அதுதான் தமிழனுக்கு ஆதி நூலாம்! இன்றைய நம் கடவுள்கள் அத்தனையும், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரும், அவர்களது பிள்ளை குட்டி களும் ஆரியக் கற்பனையே. ஆரிய வேதங்களில் அவர் களால் கொண்டு வரப்பட்டவையேஎன்பதல்லாம்ல்,தமிழர்க் குரியதாக ஒன்றைக்கூடச் சொல்ல முடியவில்லை. சிவன், விஷ்ணு தமிழருடையதென்று சிலர் சொல்லிக் கொண்ட