உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/738

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

693 போதிலும், அவற்றின் இலக்கணம் வடமொழி முறையே யாகும். லிங்கம், சதாசிவம் முதலிய சொற்களும், அவற்றின் கருத்துகளும் ஆரிய மொழியேயாகும். கடவு ளர்க்கு ஆரியர் இட்ட பெயரனைத்தும், மேல் நாட்டுக் கடவுளர்க்கு இட்ட பெயர்களை அனுசரித்தே என்பதைப் பின்வரும் பட்டியல் மூலம் ஒப்பிட்டுக் காணலாம்: சிவன், இந்திரன்-ஜூபிடர்; பிரம்மா-சாட்டர்னஸ்; எமன்-மைனாஸ்; வருணன்-நெப்டியூன்; சூரியன்-சோல்; சந்திரன்-லூனாஸ்; வாயு-சயோனஸ்; கணபதி-ஜூனஸ்: குபேரன்-புளுட்டஸ்; கிருஷ்ணன்-அப்போலோ; நாரதர்மெர்க்கரி, இராமன்-பர்க்கஸ்; கந்தன்-மார்ஸ்; துர்க்கைஜூனோ, சரஸ்வதி-மினர்வா; அரம்பை-வீனஸ், உஷாஅரோரா. - கடவுள்களின் பிறப்பு பற்றி வழங்கப்படுகின்ற கதைகளைப் போன்ற ஆபாசக் குப்பை எங்குமே காண முடியாது.” 4-12-71 அன்று பாக்கிஸ்தான் அதிபர் யாஹ்யா கான் இந்தியா மீது போர்ப் பிரகடனம் செய்து விட்டார். அமெரிக்காவில் கண் மருத்துவம் வெற்றிகரமாக நடை பெற்ற பின்னர், கலைஞர் சிக்காகோ, நியூயார்க் முதலிய மாநகரங்கட்குச் சென்று விட்டு, 5.12.71ல் சென்னை வந்து சேருவார் எனத் தகவல் கிடைத்தது. கண்ணின் இடப்புறம் இருந்த தொல்லை நீங்கி, முக்கடைப்பும், தொண்டைக் கமறலும் அறவே அகன்று, தெளிவோடும் தென்போடும் வெண்கலக் குரலோடும், பிற்பகல் 1 மணிக்குப் பதிலாக 7 மணிக்கு வந்த கலைஞரைப், பெரியார், விமான நிலையத்தில் வரவேற்றார். அன்றே கலைவாணர் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாக்கிஸ்தான் கண்டனக் கூட்டத்தில் முதல்வர் கலைஞர், தந்தை பெரியார், மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். 55 கோடி மக்கள் மீதும் 6 கோடி மக்கள் போர் தொடுத்திடவா?’ என்று முழங்கினார் பெரியார். முதல்வர் கலைஞர் நியூயார்க்கிலிருந்து தந்தை,