694 பெரியாருக்கு எழுதிய கடிதம் ஒன்று 3-12-71 'விடுதலை” யில் பிரசுரிக்கப்பட்டிருந்தது:-'அன்புமிக்க அய்யாபெரியார் அவர்கட்கு தங்கள் கருணாநிதி வணக்கம். இன்று நயாகாரா நீர்வீழ்ச்சி பார்த்துவிட்டு, அமெரிக்காவில் மிகஉற்சாகமாகக் கொண்டாடப்படும் (Thanks giving day) நன்றியறிவிப்பு நாள் விழாவில் நயாகாரா கிளப் விருந்தினராக இருந்து விட்டு, நியூயார்க் செல்லும் வழியில் இந்த மடல் எழுதுகிறேன். - தாங்களும் அம்மையாரும் வீரமணியும் நலமாக இருப் பீர்கள் என நம்புகிறேன். தங்களுக்குத் தேவைப்படும் ஒய்வுபற்றி நான் அதிகம் கூறவேண்டியதில்லை. சிக்காகோ பல்கலைக் கழகத்தில் அரசியல் பிரிவில் அரசியல் கருத்தரங்கில் கலந்து உரையாற்றினேன். அங்கு. தங்களைப் பற்றியும், நமது இயக்க வரலாறு பற்றியும் அமெரிக்க மாணவர்களும் பேராசிரியர்களும் நிறையத். தெரிந்து வைத்திருக்கிறார்கள். நம்மவர்கள் தாம் தமிழகத். தில் நமது வளர்ச்சியை, சூரியனை மேகத்தால் மூட நினைப்பது போல், இருட்டடிப்புச் செய்ய முனைகிறார். களே தவிர, உலகின் பல்வேறு நாடுகளில் நமது பணியின் பயன்பற்றிப் பேசப்படுகிறது. சிக்காகோ பல்கலைக்கழகத்தில் சுயமரியாதை இயக்கத் தின் வளர்ச்சி, தங்கள் ஓயாத தொண்டு, தங்கள் காலத்தி லேயே கொள்கைகள் பெற்றுவரும் வெற்றிகுறித்தெல்லாம் குறிப்பிட்டேன். பேச்சுக்குப் பிறகு தங்களைப்பற்றியும், தன்மான இயக்க வளர்ச்சி பற்றியும் நிறைய வினாக்கள் எழுப்பினார்கள். பதில்களை விளக்கமாக அளித்தேன். கண்ணில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. பயணத்தை முடித்துக் கொண்டு, தங்களையும், தமிழகத்து அன்பு முகங்களையும் காண, டிசம்பர் முதல்வாரத்தில் வந்து சேருகிறேன். அமெரிக்காவில் விஞ்ஞானக்கூடங்கள் பல வற்றையும் கண்டேன், அவைகளின் சிறப்புகளை நேரில் தான் விளக்கவேண்டும். தங்கள் அன்பு மறவாத மு.கருணாநிதி.வணக்கம்.' -
பக்கம்:தந்தை பெரியார்.pdf/739
தோற்றம்