உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/743

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

698 வுடைமைக் கொள்கையைப் பிரச்சாரம் செய்வதில்லை. மோட்சம், முக்தி என்ற வார்த்தைக்குத் துக்கநாசம், சுகப் பிராப்தி என்பது பொருள். இந்தக் துக்க நிவர்த்திக்கும், குறைபாடுகள் ஒழிப்பிற்கும் பரிகாரம் பொதுவுடைமை தான். ஆசையினால் ஏற்படும் குறைபாடும், தேவையினால் ஏற்படும் குறைபாடும் பொதுவுடைமையால் ஒழிந்துவிடும். ரஷ்யாவில், கணவன் மனைவியாக வாழ்கின்றவர் களுக்கு வசிக்க அறை கொடுக்கின்றார்கள். மற்ற வசதி: களும் செய்து கொடுக்கின்றார்கள். இருவரும் இஷ்டப் பட்டுச் சேர்ந்து வாழ்கின்றனர். இஷ்டமில்லாதபோது, பிரிந்து கொள்கின்றனர். ஏதாவது விவகாரம் என்றால், குழந்தைகள் யாரிடமிருப்பது என்பதாக வந்தால், அதற். கென்று தனிக் கோர்ட்டுகளில் தீர்த்துக் கொள்வார்கள். ஒருவன் மனைவியை இன்னொருவன் அனுபவித்தான் என்ற பேச்சே அங்கு வராது ; அனுபவிக்கப் பலாத்காரம் பண்ணினான் என்றால்தான் கேஸ் அங்கு பிள்ளைகளை அரசாங்கமே வளர்த்துக் கொள்கின்றது. இங்குதான் கொள்ளிபோட, சொத்துக்கு வாரிசாகப்,பிள்ளை வேண்டும். என்கிறோம். அங்கு, கீழ்மேல் என்று உத்தியோகத்தில் வித்தியாசம் இல்லை. ஒரே சம்பளம், சமமான அந்தஸ்து. வேலைதான் வேறுவேறாக இருக்கும். உடலில் வலுவிழந்த வயோதிகர் களை அரசாங்கமே காப்பாற்றுகிறது. அங்கு புரட்டோ திருட்டோ கிடையாது. அங்கு கழிப்பிணித்தனம் அவமான மாகக் கருதப்படும். நாணயம் என்பது மக்களிடம் கரை புரண்டு ஒடும். மக்களுக்கு எந்த விதமான கவலைகளோ, குறைபாடுகளோ, கிடையாது. அதனால்தான் அங்கு, 100 வயது 120 வயது வரை பல்லாயிரக் கணக்கானவர்கள் உயிரோடு வாழ்கிறார்கள். அங்கு 1915-ல் புரட்சி ஏற்பட்டது. 1920-ல் சோவியத் ஆட்சி என்று பிரகடனம் செய்தார்கள். இந்தக் காலத்துக் குன்றாக எவ்வளவு மேம்பாடு அடைந்து விட்டார்கள்.