699 எனவே எனக்குத் தோன்றிய பொதுவுடைமை சுருக்கமாய்ச், சொன்னேன்!” - 20-ந் தேதி சென்னையில் பகுத்தறிவாளர் கழகக் கூட்டம், கா. திரவியம் த ைல ைம யி ல் நடந்தது. அமைச்சர்கள் க. ராஜாராம், எஸ். ராமச்சந்திரன் ஆகியோர் பேசியபின் பெரியார், எதிரிகளை வென்று விடலாம், இனத் துரோகிகளை அடையாளம் காண்பது. சிரமம். பகுத்தறிவுவாதி போல வேஷம் போடுவோரிடம். தான் நாம் மிகுந்த எச்சரிக்கையாயிருக்கவேண்டும்” என்று. உஷார்படுத்தினார். 23-ந் தேதி கடலூரில் இல்லாத கடவுளை இருப்பதாகக் கூறும் மடமையை ஒழிக்கவேண்டும் என்கிறோம் நாங்கள். இதிலென்ன தவறு?' என்று. பெரியார் கேட்டார். w , , "தமிழரசு' இதழின் சிறப்பு மலர் ஒன்றில் பெரியார் கட்டுரையொன்று வழங்கியிருந்தார். அதன் முடிவுரை யாக, சாதி ஒழிப்பு போன்ற பணிகளுக்கு மத்திய அரசு தடையாக இருந்து வருவதால், தமிழ் நாடு தனியாகப் பிரிந் தால்தான் வழிபிறக்கும் என்ற எண்ணம் ஏன் உண்டாகக், கூடாது என்று கேட்டிருந்தார். அரசு இதழில் பிரிவினை வாடை வீசுவதாகச் சட்டமன்றம் வரையில் சிலர், பிரச்னை உருவாக்கினர். 22, 24 ஜனவரி 72 விடுதலை' இதற்கான விளக்கங்களை நல்ல வண்ணம் தீட்டிக் காட்டிற்று. 26-1-1950 Hindu ஏட்டில், பெரியார், ஏன் தனித் திராவிட நாடு வேண்டும் என்பது பற்றி விளக்கிக் கட்டுரை எழுதியிருந்தார். அதனால் இந்து'வின்கொள்கை திராவிட நாடு பிரிவினை என்றாகி விடுமா?’ என்று. கேட்டது விடுதலை’. . 23-ந்தேதி பகல் 11, 30 மணியளவில் சென்னை தேவி குரூப் தியேட்டர்களின் உரிமையாளர்கள் வேண்டியவாறு, பெரியாரும் மணியம்மையாரும் அங்கு சென்று, சுற்றிப் பார்த்து, வியந்து, மேல் நாட்டை ஒப்ப நம் நாட்டுத் தமிழர் ஒருவர் இதனை அமைத்துள்ளதற்காகப் பாராட்டுகிறேன்” என்று வருகையாளர் பதிவேட்டில்
பக்கம்:தந்தை பெரியார்.pdf/744
தோற்றம்