உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/747

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

702 விசாரித்தார். 19-ந்தேதியன்று ஏ. வி. பி. ஆசைத்தம்பி, சி. பி. சிற்றரசு ஆகியோர் வந்து பார்த்தனர். அன்று மாலை 4.30 மணிக்குப் பெரியார் திருச்சி போய்ச் சேர்ந்தார். அங்கு 20.ந்தேதி பேராசிரியர் அ ன் பழ க னு ம், 21-ந்தேதி காமராஜரும் பெரியாரைக் கண்டனர். 22-2-72 அன்று பெரியார் சென்னை வந்து சேர்ந்தார். 'பெரியார் திடலில், அன்றைக்குப் பெரியாாை, இலங்கைத் தமிழர் தலைவர் செல்வநாயகம், அவரது தளபதி அமிர்த லிங்கம், திருமதி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம், மணவைத் தம்பி ஆகியோர் சந்தித்து உரையாடினர். அமைச்சர் ராஜாராமும், துணைவேந்தர் சுந்தர வடிவேலுவும் உட னிருந்தனர். இலங்கைத் தமிழர் பிரச்சினைகளில் தமது அனுதாபமும் ஆதரவும் எப்போதும் உண்டு என்றார் 'பெரியார். மறுநாள் 23-ந் தேதி பெரியார் பெங்களுருக்குக் கிளம்பினார். 29-ந் தேதி , சென்னையில் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் டாக்டர் நாவலர் நெடுஞ்செழியனுக்குப் பாராட்டு விழா; பெரியார் தலைமையில், அமைச்சர்கள் மாதவன், அன்பில் தர்மலிங்கம், வீரமணி, கா.து. நடராசன், நெ. து. சுந்தரவடிவேலு, ஏ. என். சட்டநாதன் ஆகியோர் பாராட்டுரை பகர்ந்தனர். 'சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர், அந்தக் காலத்தில் M. A. பட்டம் பெறுவ தென்பது சாமான்யமல்ல, இவர் தம்பியும் எம். ஏ. பட்ட தாரி, படித்து முடித்ததும் இவர் நேரே என்னிடம்தான் வந்தார். எனக்குச் சோறு போதும்; தங்களுடன் பொதுத் தொண்டு செய்கிறேன் என்றார். இவர் சந்து பொந்து இல்லாத பகுத்தறிவாளர் என்னைப் போல இவரும், தன் வரையில் சிக்கனமானவர்!’ என்று பெரியார் நாவலரைப் புகழ்ந்தார். - - 1-3-72 அன்று தமிழ் நாடு அரசு சமர்ப்பித்த பட்ஜெட் 249 கோடி ரூபாய் உபரி. பெரியார் இதனை வெகுவாகப் பாராட்டினார்."மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டதால்தான் உபரி பட்ஜெட் தர முடிந்தது. மேலும் பல நல்ல திட்டங் களை அறிவிக்கமுடிந்தது. உச்சவரம்பை, ஒரு குடும்பத்துக்கு