704 கொள்ளவே, சரியென இணக்கம் தெரிவிக்கப்பட்டது. ஊர்வலத்தில் பெரியாரும், வீரமணியும் அலங்கார ரதத்தில் அமர்ந்து சென்றனர். மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டின் வரவேற்பாளர் செல்வேந்திரன், தலைவர் வீரமணி, சி. பி. சிற்றரசு, திருவாரூர் தங்கராசு, எஸ். எஸ். பாட்சா, இறையன் பி.ஏ. பி.டி. ஆகியோரின் உரை. பெரியாரின் பேருரையோ இரு நாட்களுமே! இது ஜாதிப் பாதுகாப்பு மாநாடல்ல, இது ஒட்டு வேட்டை மாநாடல்ல, மானத்துக்கு உயிர் கொடுக்கத் துடிக்கும் மாநாடு -எனவும், திடுக்கிடும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும், எனவும் விளம்பரம் செய்யப்பட்டதால், ஏராளமான பொது மக்கள் குழுமியிருந் தனர் சுதந்திரத் தமிழ் நாடு பெறக் கிளர்ச்சி துவக்குவது என்றும்; கோயில்களில் அனைவருமே பூசை செய்வதற்கான உரிமையை நிலை நாட்டுவது என்றும்; கோயில்களைப் புறக்கணிக்குமாறு பொது மக்களை அமைதியாக வேண்டு வது என்றும் தீர்மானங்கள் இயற்றப் பெற்றன. இந்த அரசு நீடித்து இருந்தால்தான் நமது இந்தக் காரியங்கள் வெற்றி பெற முடியும். அரசுக்கு ஏதாவது இடையூறு வருமென்று கருதி, நம்மைக் கைவிடக்கோரினால், அப்படியே கேட்க வேண்டியதுதான் நமது கடமை! ஏனென்றால், கண்ணைக் குத்திக்கொண்ட பின் சித்திரம் வரைய முடி யுமா?’ என்றார் தந்தை பெரியார். 14-3-72 அன்று அர்ச்சகர் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. அதாவது, அர்ச்சகர் தொழிலுக்குப் பரம்பரை பாத்யதை கிடையாது. ஆனால் அர்ச்சகர் நியமன விஷயத்தில் அந்தக் கோயிலின் ஆகமம் பின்பற்றப்படவேண்டும். "விடுதலை’ விமர்சித்தவாறு, இது ஆப்பரேஷன் வெற்றி; நோயாளி இறந்தார் என்பது போன்றதே! 15-ந்தேதி தலையங்கத்தில் விடுதலை: எழுதிற்று:-'டாக்டர் அம்பேத்கார் முன்பு சொன்னதுதான் *f; We are bound by the decision; but we do not bound to respect the decision.” syrfgerasrf ri LL-& glob#g;&#wak காகிதி.மு.க. நாடாளுமன்றத்தில் போராடும் என, முதல்வர்
பக்கம்:தந்தை பெரியார்.pdf/749
தோற்றம்