உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/753

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

708 சிலைக்குப், பகுத்தறிவாளர் கழகச் சார்பில், கா. து. நடராசன், என். எஸ். சம்பந்தம், எஸ். துரைசாமி ஆகியோர் மாலை சூட்டினர். சிலம்புச் செல்வர் ம. பொ, சிவஞானம் சட்ட மன்ற மேலவையின் துணைத் தலைவராக அன்றைய தினந்தான் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். மன்னார்குடியில் மே, 6, 7 தேதிகளில் நடந்த தி. மு. க. மாநாட்டில் பெரியாரும் பங்கேற்று, (-ந் தேதி அண்ணா படத்தினைத் திறந்து வைக்கும் போது, "இன்றும் இரட்டையாட்சி முறைதானே இ ங் கு நடைபெறு கிறது? அது நீங்கி, நம் சொந்த ஆட்சி நடைபெற வேண்டும்! அதற்கு என்ன வழி? முதலில் கோயில் சொத்துக்களை அரசுடைமை ஆக்குங்கள். கடவுளைப் பர்துகாக்க ஒரு இலாக்கா இருப்பதை ஒழியுங்கள்' என்றார். 9-ந் தேதி தொட்டியத்தில் 'தி. மு. க. ஆட்சி மேலும் 50 ஆண்டுகள் நீடிக்க வேண்டும். பொது மக்களாகிய நீங்கள் இன்னும் பக்குவமடையாத காரணத் தால்தான் ஆட்சியாளர் துணிவாக எதையும் செய்யாமல், பயப்படுகிறார்கள்,' என்று பெரியார் எடுத்துக் காட்டினார். மே 27 மாநிலப் பகுத்தறிவாளர் மாநாடு. 26-ல் மாநில இழிவு ஒழிப்பு மாநாடு, முந்தியதற்குத் தலைவர் நாவலர், திறப்பாளர் கலைஞர். பிந்தியதற்குத் தலைவர் பெரியார், திறப்பாளர் சி. பி. சிற்றரசு. காரைக்குடி ஆர். சுப்ரமணியம் குழுவினரின் தீ பரவட்டும் நாடகம் நடை பெற்றது. பெரியார் நேரடி மேற்பார்வையில் மாநாட்டின் ஏற்பாடுகள் நடைபெற்றன. இடையில் பெய்த மழையின் பாதிப்புகள் சமாளிக்கப்பட்டன. புத்தகக் கண் காட்சி, ஓவியக் கண்காட்சி, பாட்டரங்கம், படத்திறப்பு விழாக்கள் எல்லாம் நடைபெற்றன. பக்குவமடையவும், மான உணர்ச்சி பெறவும், கோயில்களுக்குச் செல்ல வேண்டா மெனக் கேட்டுக் கொள்ளவும், செயலில் இறங்கிடச் சிந்தனை செய்யவும் இந்த மாநாடு பயன்படும் என்றார் பெரியார். அன்பில் தர்மலிங்கம் கண்காட்சி திறந்தார். 'இந்தக் கண்காட்சி ஆபாசம் என்றால் கோயில்களில்,