710 வாழ்த்துச் செய்தியை வீரமணி நேரில் படித்தளித்தார், காலை 8-30 மணிக்கெல்லாம். கோயில்கள் ஏற்பட்டது ஏன் என்ற தொடர் கட்டுரை ‘விடுதலை'யில் ஆசிரியர் வீரமணியால் எழுதப்பட்டு வந்தது; கடவுளரின் ஆபாசக் கதைகளும் பெட்டிச் செய்தி யாகப் பிரசுரமாகி வந்தன. ஜூன் மாதம், மற்ற முந்திய மாதங்களை விட அதிகமாகப் பெரியார் சுற்றுப்பயணம் மேற் கொண்டார். 11.5.12 அன்று கூடிய சென்னை மாவட்ட திராவிடர் கழகம், அடுத்த 16-6-72 முதல் மயிலை கபாலி கோயில் முன் பகிஷ்காரக் கிளர்ச்சி துவக்குவதாக முடிவெடுத்து, முன்னேற்பாடுகளில் தீவிரமாக இறங்கிற்று. 14-ந் தேதி கோவையில் கூட்டத்தில் பேச்சைத் துவக்கிய பெரியார், பரிதாபத்திற்குரிய சகோதரர்களே உணர்ச்சி யற்ற தாய்மார்களே! இனி இப்படித்தான் உங்களை அழைக்கப் போகிறேன்!” (என்று துவக்கினார்) 15:6-12 அன்று பெரியாரிடமிருந்து runk calடல் வந்த செய்தி, "விடுதலை"யில் கட்டம் கட்டிப் பிரசுரிக்கப் பட்டது. "நமது கிளர்ச்சிக்கு அரசு தடை விதித்திருப்பதை இன்று அறிந்தேன். நம்முடைய கிளர்ச்சி பலாத்காரம் சிறிதுமில்லாத வேண்டுகோள் முறைதான். இதைத் தடை செய்திருக்க நியாயமேயில்லை. இனி நமக்கு மானத்தோடு வாழ வாய்ப்பில்லை. தடையை மதிப்பதும், தடைக்கு ஆளாவதும் மானக்கேடு என்றுதான் கருதுகிறேன். என்றா லும், நம்மாலான வரையில் இந்த ஆட்சிக்குச் சங்கடமும் அதிருப்தியும் ஏற்படாதவாறு நடந்து கொள்ளக் கருதி, நீதி யாய் நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்துச், சிறிது நாட்களுக்கு ஒத்தி வைக்கிறேன்!'-கபாலி கோயில் கிளர்ச்சி இவ்வாறாயிற்று! சென்னை பகுத்தறிவுக் கண்காட்சியில் வைக்கப் பட்டிருந்த கடவுளர் ஆபாசப் படங்கள் சிலவற்றை “Illustrated Weekly” 18-6–72 Goo Galafiuoli, o, "துக்ளக்” இதழிலும் சில படங்கள் வெளியாயின. சேலம் எஸ்.சி. ஜெயராம ரெட்டியார் என்ற தனி நபர் ஒருவர்.
பக்கம்:தந்தை பெரியார்.pdf/755
தோற்றம்