உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/763

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

719 "கவர்னர் பதவி தேவையற்ற ஒன்று. எப்போதும் அவர்கள்டில்லியின் ஏஜண்டாகத்தான் பணியாற்றுவார்கள். இதுவரையில் எந்த கவர்னர் வந்தாலும்,அவரது தனிக்காரிய தரிசி பார்ப்பானராகவேதான் இருக்கிறார்” என்று 7-ந்தேதி "விடுதலை'யில், ஆசிரியர் வீரமணியின் தலையங்கக் கட்டுரை வெளியானது. வேடிக்கையான வேதனையான பெட்டிச் செய்தி ஒன்று 'விடுதலை'யில் வெளியாகியிருந்தது. ஈ.வெ.ரா. வேண்டு கோள். அன்புள்ள நண்பர் திருவண்ணாமலை பால கிருஷ்ணன் அவர்களே! நீங்கள் வீட்டை விட்டு வெளியேறி நாள் ஆகிவிட்டதாம். நீங்கள் எங்கிருந்தாலும் திருச்சி பெரியார் மாளிகைக்கு உடனே வாருங்கள். உங்களுக்கு என்ன குறை இருந்தாலும் நானே தக்கது செய்கிறேன். உங்கள் நண்பன் ஈ.வெ.ராமசாமி திருச்சி 12-8-12 13.7.72 அன்று கடலூரில் அரிய பெருவிழா. கெடிலம் பாலத்தருகில் பெரியார் சிலை திறப்புவிழா, மஞ்சகுப்பம் மைதானத்தில் மாபெரும் பொதுக்கூட்டம். ஊரே மக்கள் திரளால் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கி வழிந்தது. மாலை 5 மணிக்குத் தந்தை பெரியார் முத்துப்பல்லக்கில் அமர்ந்து வர, மக்கள் முழங்கிவரக், கடலலை போல் மனிதத்தலை அணி அணியாய் ஊர்ந்துவர, அழகு மிகு எழுச்சி ஊர்வலம் புறப்பட்டதுவே இடையிடையே முதல்வர் கலைஞர்,. அமைச்சர்கள் ப.உ. சண்முகம் எஸ். இராமசந்திரன், சி.பி. சிற்றரசு, அன்பில் தர்மலிங்கம், ஆகியோர் பல்லக்கில் ஏறி அமர்ந்து கொண்டனர். ஊர்வலம் வரும் வழியில், அனை வரும் இறங்கி, தந்தை பெரியார் நிற்கும் பாங்கில் அமைக்கப் பெற்ற முழுஉருவ வெண்கலச் சிலையினைக் கலைஞர் திறந்துவைக்க, மீண்டும் ஊர்வலம் முன்னேறி, நகராட்சி மன்றம் அடைய, அங்கே பெரியார், முதல்வர், அமைச்சர் கட்கு நகராட்சிமன்றம் வரவேற்பு வழங்கி, இரவு 9 மணிக்கு முடிக்க, பொதுக்கூட்டம் 9-30மணிக்கு தொடங்கியது.