720 மேலவைத்தலைவர் சிந்தனைச்சிற்பி சி.பி. சிற்றரசு தலைமை ஏற்றார். கண்காட்சியின் பகுத்தறிவுக் கோலத்தை 'மக்கள் கண்டு விழிப்புணர்வு பெறுமாறு, ப.உ. சண்முகம் திறந்து வைத்தார். வீரமணி-கடலூர்க்காரராயிற்றே - வரவேற்றார். மாவட்ட அமைச்சர் எஸ். இராமச்சந்திரன் 10,000 ரூபாய் பொற்கிழி பெரியார்பால் ஈந்தார். முதல்வர் கலைஞர் பேசும்போது, "சிக்காகோ பல் கலைக் கழகத்தில் பெரியாரின் நூல்களெல்லாம் இருந்தது. காணப் பெருவியப்பும் மகிழ்ச்சியும் பெருமையும் உற்றேன். பெரியாரிடம் நாம் தரும் செல்வம் வீண்போகாது. மருத்துவ மனையாக, கல்விச்சாலையாக மக்களுக்கே திரும்பிவரும்' என்றார். மேலும், இன்று பெரியாருக்குச் சிலை. சிலை என்றால் வில் என்றும் ஒரு பொருளுண்டு. பெரியாரின் வில்லில் இருந்து புறப்பட்ட அக்கினியாஸ்திரம் அழகிரி; வருணாஸ்திரம் அண்ணா:நாகாஸ்திரம்சி.பி. சிற்றரசு; நான் என்ன அஸ்திரமோ நீங்களேமுடிவுசெய்யுங்கள்' என்றார். புதுவைமுதல்வர்ஃபாரூக், அன்பில் தர்மலிங்கம், சிதம்பரம் டாக்டர் ரங்கசாமி, ஆர். கனகசபை, எம். செல்வாாஜ் எம். எல்.ஏ. ஆகியோருக்குப்பின், பெரியார் சீருரை நிகழ்த்தினார். செருப்பொன்று போட்டால் சிலையொன்று முளைக்கும். என்று, 1944-1972 இரு நிகழ்ச்சிகளுக்கும் eye witness ஆன கவிஞர் கருணானந்தம், கவிதை யொன்று தீட்டியவாறு, பெரியார் சிலை பீடத்தில் குறிக்கப்பட்ட சொற்கள் மிகப் பெரிய வரலாற்று உண்மை ஒன்றை நினைவூட்டுகின்றன. சரித்திரக் குறிப்பு 29-1-1944 அன்று தந்தை பெரியார் அவர்கள்மீது செருப்பு, பாம்பு வீசப்பட்ட இதே இடத்தில், இன்று (13-8-1972) அவருக்கு சிறப்புடனும் அன்புடனும் சிலை எழுப்பப்படுகிறது. வாழ்க பெரியார் வளர்க பகுத்தறிவு| 15-8-1972 சுதந்திர தின வெள்ளி விழா. சென்னைக் கடற்கரையில் முதல்வர் கலைஞர் தலைமையில் பேசிய மத்திய அமைச்சர் ஜெகஜீவன் ராம், பெரியார் வழியில்
பக்கம்:தந்தை பெரியார்.pdf/764
தோற்றம்