உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/771

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

727 இலட்சதீபம் என்கிறான்; அபிஷேகம் என்கிறான்; எல்லாம். குடம் குடமாக ஜலதாரைக்குப் போகிறது. கேள்வி கேட்பாரே கிடையாது. இந்தப் பார்ப்பனர் வாழும் நாட்டைத் தவிர வேறு எந்த நாட்டிலும் இப்படிப்பட்ட பழக்கமோ, வழக்கமோ, சர்க்கார் அனுமதியோ கிடை யாதே! - மேலும், தேசத்தில் உள்ள 50 கோடி மக்கள் ஒன்று சேராதபடி, 16 மாகாணங்களாகப் பிரித்து, பல நிபந்தனை களைக் கட்டாயச் சட்டமாக ஆக்கிக்கொண்டான். இது உலகம் உள்ளவரை நிரந்தரமாகப் பிரிந்திருக்க வேண்டும் என்று நிர்ப்பந்தமும், பிரிந்துகொள்ள விரும்புகிறவனுக்குப் பிரதிநிதித்துவ உரிமை இல்லை, கிரிமினல் தண்டனை என்றும் ஆக்கிக்கொண்டு, மேல் சாதியானுடைய சர்வாதி கார ஆட்சியை ஏற்படுத்திக் கொண்டு, பரம்பரைச் சொத்து போல், அனுபவித்து வரும் ஒர் ஆட்சியின் கீழ் நாமிருக் கின்றோம். இதை அடிமை ஆட்சி என்றும் சொல்ல முடியாமல், அந்நிய ஆட்சி என்றும் சொல்ல முடியாமல் தவிக்கின்ற நிலைமையில் இருக்கின்றோம். நாட்டின் சுதந்தரம் இந்த யோக்கியதையில் இருக் கிறது. நமக்கு உண்மையான சுதந்தரம் வேண்டுமானால், தமிழ்நாடு தனித்த ஏகபோக ஆட்சியாய் இருக்கவேண்டும்.' 21-ந் தேதி முதலமைச்சர் கலைஞர் ஹைதராபாத்தில் பேசும்போது, "பெரியாரைப்போல் உங்கள் மாநிலத்தில் யோகி வேமண்ணா, சவுதுரி ராமசாமி ஆகியோர் உள்ளனர்” என்று சிறப்பித்துக் கூறினார். 22-ந் தேதி கும்பகோணம் அருகில் பெரியார் வேனில் ஒரு டிராக்டர் மோதி, வேன் கதவு நசுங்கிவிட்ட்து. பெரியாருக்கும் மற்றவர் களுக்கும் அதிர்ச்சி தவிர, ஒன்றும் ஆபத்தில்லை. டிராக்டர் ஒட்டிமீது நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்து விட்டுப் பெரியார் மாயூரம், திருவையாறு, மண்ணச்சநல்லூர் நிகழ்ச்சிகளுக்குத் தொடர்ந்து செல்கிறார் என்று, வீரமணி அறிவித்தார். இராவண காவியம் பாடிய புலவர் குழந்தை