728 24-ந் தேதி மறைந்தார். பஞ்சாபின் சீர்திருத்த வாதியும் அங்கே பெரியாரைப் போலப் பிற்படுத்தப்பட்டோருக்காகப் பாடுபடுபவருமான சந்த்ராம் பி.ஏ., ஹோஷியார்பூரிலிருந்து பெரியார் பிறந்த நாளை ஒட்டி ஒரு கடிதம் எழுதியிருந் தார். பெரியாரும், அண்ணாவும் எங்கள் கண்களிலேயே எப்போதும் நிற்கிறார்கள். இவர்கள் தொண்டு பாராட்டத் தக்கதாகும் என்று புகழ்ந்தார் அவர். இராஜாஜி காலத்தில் சட்டமன்றச் செயலாளராயிருந்த ஆர். வி. கிருஷ்ணய்யரின் மகன் ஆர். கே. பாலசுப்ரமணியம் சென்னையில் பாராளுமன்றப் பணிகளுக்கான ஆய்வகம் ஒன்றை நடத்தி வருகிறார். தமிழ்நாட்டில் பெரியாரின் ஒய்வற்ற பணிகளால் பல்வேறு துறைகளில் மக்களிடையே குறிப்பிடத்தக்க மனமாற்றம் நிகழ்ந்துள்ளது. அவரது தொண்டுகளை அங்கீகரித்து அவரை நட்புடன் அணைத்துச் செல்வது ஆட்சிக்கு நல்லது' என்று அவர் பிரதமர் இந்திரா காந்திக்கு ஒரு விவரமான கடிதம் எழுதியிருந்தார் 30-9-72 அன்று, அதற்குப் பிரதமரின் அந்தரங்கச் செயலாளர் என். கே. சேஷன் மேற்கண்ட கடிதம் கிடைக்கப்பெற்றது. மிக்க நன்றி பிரதமர் கடிதத்திலுள்ள விஷயங்களைப் பார்த்துக் கொண்டார்' எனப் பதில் விடுத்திருந்தார் 3.10.72-ல். 4-ந்தேதி வள்ளலார் விழாவில் பேசிய முதல்வர் "அடிகளார் போன்றவர்கள் எவ்வளவு பேசினாலும் நமது தமிழ் மக்களை எழச்செய்ய முடியாது. அவர்களது கும்பகர்ணத் தூக்கத்திலிருந்து எழுப்பப் பெரியார் எனும் யானைதான் மிதிக்கவேண்டும்” என்றார். கல்வி சம்பந்தமாக அடைந்துள்ள முன்னேற்றம் 1967ல் 27 கல்லூரிகள், 72-ல் 52. மாணாக்கர் எண்ணிக்கை 1967-ல் 80,000, 1972ல் 1,83,000 என்றார், நாங்கள் பெரியா ரிடம் கற்ற பாடத்தை மனத்தில்கொண்டு பணியாற்று வதால், கோயில் வருமானம் பெருகியுள்ளது. மழையில் போகவேண்டாம் என்று குழந்தையிடம் சொல்லியும் அது கேட்காமல், அடம்பிடித்து மழையில்தான் டோவுேன் என்றால், குடையைக் கொடுத்து அனுப்பு வது போலப், பிடிவாதமாகக் கோயிலுக்குப் போவோம்
பக்கம்:தந்தை பெரியார்.pdf/772
தோற்றம்