733 கலைஞர் எதிலேயோ காலை வைத்து விட்டாரே என, இவர் பொருளாளராக வைக்கப்பட்டபோதே பெரியார் கூறினார். மதுவிலக்கு நீடிக்க வேண்டாம்; நீக்க வேண்டும் எனப் பேசினார் எம். ஜி. ஆர்.” என்றதோடு, பிறகோர் சமயத்தில் எம். ஜி. ஆர். அண்ணாவின் மருத்துவச் செலவுக்குத் தான் பணம் கொடுத்ததாகச் சொன்னபோது, "அப்படியானால் அது இவருடைய வருமானவரிக் கணக்கில் எழுதப்பட்டிருக்குமே, காட்ட முடியுமா?’ என்றும் கேட்டார் ராஜாராம். - கலைஞர் தலைமை மாறினால் போதாது. தி. மு. கழக ஆட்சியே மாற வேண்டும் என்று எம். ஜி. ஆர். சொன்னதாக 22-ந் தேதி அலை ஒசை ஏடு வெளி யிட்டதை, 26-ந் தேதி 'விடுதலை' பெட்டிச் செய்தி யாகப் பிரசுரித்தது. 22-10-72 அன்று திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜாங்கம் மரணமடைந்தார். பின்னர் 23.1.73 அன்று, கூடலூரில் ராஜாங்கம் இல்லம் சென்று, பெரியார் துக்கம் விசாரித்து, அவர் படத்துககு. மாலை சூட்டி வந்தார். . . 22-10-72 அன்று நாகர்கோயிலில் பெரியார் சிலை அமைப்புக் குழு கூடி, முதல் கூட்டத்திலேயே 13,750 ரூபாய் வசூலாயிற்று. 23-ந் தேதி இராமநாதபுரத்தில், அமைச்சர் மன்னை நாராயணசாமி பேசும்போது கல்லெறிந்து கலகம் விளைத்ததில், அமைச்சரின் மண்டை உடைந்து, ரத்தம். சிந்தியது. (எம். ஜி. ஆர். ரசிகர்களால்!) 23-10-72 விடுதலை'யின் தலையங்கத்தில் பெரியார் தனது அரசியல் நிலை குறித்து ஒரு விளக்கமளித்திருந்தார்: 'நான் எப்போதும் எந்தக் கட்சிக்கும் ஆதரவு கொடுக்க, முந்துபவன் அல்லன்; முந்தியதே கிடையாது. என்னை அணுகுகின்றவர்களுக்குத்தான் ஆதரவு கொடுத்து வந்திருக் கிறேன். எனக்கு எந்தக் கட்சி ஆதரவும் தேவையில்லை. ஜஸ்டிஸ் கட்சி என்னை அடைந்ததால் அதற்கு ஆதரவு. கொடுத்தேன்; நானே ஜஸ்டிஸ் கட்சியானேன். யாரையும். 'போய் ஆதரவு தேடாமல் இன்று; ஜஸ்டிஸ் கட்சியே,
பக்கம்:தந்தை பெரியார்.pdf/777
தோற்றம்