உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/779

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

735 கேடுகள் தங்கு தடையின்றி நடைபெறுகின்றன. பணக் காரரும் பார்ப்பனரும் சேர்ந்து, தி. மு. க. ஆட்சியை ஒழிப் பதற்கான காரியத்தில், இந்திரா காங்கிரசின் சலுகையும் தேவைப்பட்டதால் அதையும் வேண்டிய அளவு பெற்றுக் கொண்டு, இப்போது திசை திருப்பிவிடும் தந்திரமாக, இதற்கு எம்.ஜி.ஆர். கிளர்ச்சி என்று பெயர் தந்துவிட்டனர். தி. மு. க.வுக்குக் கலைத்துறையில் தொடுப்பு இருந்ததால் எம். ஜி. ஆர். அங்கிருந்து அரசியலுக்கு இழுக்கப்பட்டார். மெள்ளப் பொருளாளராகவும் ஆகிவிட்டார். இந்த வளர்ச்சியைக் காட்டித், தனக்கு மந்திரி பதவி கேட்டாராம். மதுரை மாநாட்டில் வரம்புமீறிப் பேசிவிட்டதாலும் பிணக்கு ஏற்பட்டதாம். இதெல்லாம் தி. மு. க.வை விட்டு வெளியேறுவதற்கான சாக்குதான்! இப்போது எம்.ஜி.ஆரை தூக்கி வைத்துக்கொள்ளும் பத்திரிகைகள், முன்பு இவரை எம். ஆர். ராதா சுட்டபோது எம். ஜி. ஆரை ஆதரித்தார் களா? அனுதாபப்பட்டார்களா? இப்போது மட்டும் இவர் மீது என்ன அக்கறை? தமிழர்களே! உங்கள் தலையில் நீங்களே நெருப்பை அள்ளிக் கொட்டிக் கொள்ளாதீர்கள்! எச்சரிக்கை!' - இத்தோடு விடவில்லை பெரியார். பார்ப்பனரல்லாத இன நலக் கண்ணோட்டத்தினடிப்படையில், ஒற்றுமைக் காக ஆனவரை முயல்வதே அவரது வாடிக்கை 24-ந் தேதி யும் எம். ஜி. ஆருக்கு அறிவுரை' என்ற தலையங்கந் தீட்டி னார்:-"எம். ஜி. ஆர். ஒரு கலைஞர். எனக்கு அந்தத் துறையில் அனுபவம் இல்லை; சுயபுத்திக் கொள்கை உடைய நடிகரின் நாடகம்தான் நான் பார்ப்பேன். இரண்டொரு சினிமா பார்த்திருக்கிறேன். சிவாஜிகணேசன், எம். ஆர். ராதா ஆகியோரை எனக்கு நன்றாகத் தெரியம். எனக்கு இவரைத் தெரியாது. இரண்டொரு நிகழ்ச்சிகளில் பார்த்த போது, வணக்கம் தெரிவித்தார்: நானும் பதில் வணக்கம் தெரிவித்தேன்! இவருக்கு இன்கம்டாக்ஸ் தொல்லை. இருக் கிறது என்கிறார்கள்! அதனால் குழப்பம் ஏற்படுவது யற்கைதான். இதனால்தான் யோசிக்கிறேன். நான்