உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/780

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

736 கட்டாயம் வேறு கட்சியில் சேரமாட்டேன்’ என்று என்னிடம் கூறினார். இவரால் இனி கழகத்திற்கும் தொல்லைதான். இவருக்கும் இனி கலைத்துறையும் வீழ்ச்சி தான். பார்ப்பனர் ஆதரவெல்லாம் எவ்வளவு நாள் தாங்கும்?' என்று. அடுத்த நாளாகிய 25-10-72 அன்றும் ஒர் தலையங்கம் சிந்திக்க வேண்டும்’ என்பதாக இதில் ஒர் உவமைகூறினார். புருஷன் செத்ததை நினைத்துக்கொண்டு, வேறொரு இழவு வீட்டிற்குச் சென்றாலும், அங்கே அழுவதுபோல், பார்ப் பனர்களும், தமிழ் மக்களின் எதிரிகளும் சேர்ந்து நடத்து வதே இன்றையக் கிளர்ச்சி. இதற்குப் பத்திரிகைகள் ஆதரவு தருவது எம். ஜி. ஆருக்காக அல்ல. தி. மு. க.வை ஒழித்து விடுவதற்காகவே-என்று குறிப்பிட்டார் பெரியார். தமிழகச் சட்டமன்றப் பேரவைச் செயலாளரும், அண்ணாவின் உடன் பயின்றோருமாகிய சி. டி. நடராசன் அவர்களின் மகன் டாக்டர் பரிமேலழகன் எம், எஸ்.செல்வி வனிதா திருமணம் ஆபட்ஸ்பரி மாளிகையில் 26.ந் தேதி நடைபெற்றது. பெரியார், கலைஞர், அமைச்சர்கள், அதிகாரிகள், தமிழ்ப் பெருமக்கள் அனைவரும் வாழ்த்திச் சிறப்பித்தனர். பூந்தமல்லி வழக்கறிஞர் பழனியப்பன் அவர்களின் தந்தை ரத்னசபாபதி அவர்கள் மறைந்த துக்கம் விசாரிக்கப் பெரியாரும், மணியம்மையாரும் 29-ந் தேதி அங்கு சென்று, ஆறுதல் கூறி வந்தனர். பெரியாரின் மனவேதனை தணியவேயில்லை என்பதற்கு ஒரு சான்று, 1-11-72 விடுதலை'யில் அவர் எழுதிய தலையங்கம். இதற்கு அவர் கொடுத்த தலைப்பே அயோக்கியர் அயோக்கியர், மகா அயோக்கியர் என்பது. என்ன எழுதினார் தெரியுமா? "அரசியலில் கட்சி மாறுகிற வர்கள் அயோக்கியர்கள், அயோக்கியர்கள், மகா அயோக் கியர்கள்! அரசியலில், ஒரு கட்சித் தலைவர்களிடம் பல்லைக் காட்டிக் கெஞ்சி, சிபாரிசு பிடித்து, தன்னை ஒரு இடம் கொடுத்து ஏற்றுக்கொள்ளச் செய்து, தேர்தலில் 10 ஆயிரம் 20 ஆயிரம் கட்சிப் பணச் செலவில் பதவிக்கு ...” 醬