உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/781

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

737 வந்து, கைதுக்குவது தவிர வேறு ஒரு தொண்டும் கட்சிக் குச் செய்யாமல், பொதுமக்களிடம் பணம் வாங்கிக்கொண்டு சர்க்காருக்குப் பல சிபாரிசுகள் செய்து பணம் சேர்த்துக் கொண்டு, கட்சிப் பெயரால் பதவிப் பெயரால் பல சலுகை களைப்பெற்று அவற்றாலும் பணம் சம்பாதித்துக்கொண்டு, தகுதிக்கு மேற்பட்ட சொத்தும் அந்தஸ்தும் வருவாய்க்கு வழியும் தேடிக் கொண்டதைத் தவிர, வேறு காரியத்திற்குப் பயன்படாத அநாமதேயங்கள் சுயநலத்துக்கு என்றே கட்சியைக் காட்டிக் கொடுக்க, விலை பேசி வாங்கி வேறு கட்சி என்னும் பேரால் தானிருந்த கட்சிக்கு மனதறிந்து கேடு செய்யும் கட்சிக்குப் போய்த் தன் பெயரைக் கொடுப்ப தும், தன்னை ஆளாக்கிய கட்சியைக் குறை கூறுவதும், அக் கட்சியை ஒழிக்கப் பாடுபடுவதும், அதற்குத் தன் பெயரைக் கொடுப்பதுமான காரியத்தில் ஈடுபடுவதைத்தான்-நான் அயோக்கியம், அயோக்கியத் தன்மை என்றும், அயோக்கியர் என்றும், மேலும் அப்படிப்பட்டவர் மகா அயோக்கியர் என்றும் பொது நன்மையை உத்தேசித்துக் கூறுகிறேன்! இம்மாதிரிக்கண்டிக்காவிட்டால்,இப்படிப்பட்டவர்களை மக்கள் வெறுக்கும்படிச் செய்யாவிட்டால், நாளாவட்டத் தில் யோக்கியமான பலருக்கும் நாக்கில் தண்ணீர் வடிய ஆரம்பிக்கும். கட்சி மாறுகிறவர்கள், தமது தேர்தலுக்குக் கட்சி செய்த செலவுத் தொகைகளைக் கொடுத்துவிட்டு, கட்சியால் தாம் பெற்ற பதவியையும் ராஜிநாமாச் செய்து விட்டு வெளியேற வேண்டும். அப்போதுங்கூட இது வரை தானிருந்த கட்சியில் மக்களுக்கு என்னகெடுதல் ஏற்பட்டது; அகைத் தவிர்க்கத் தானெடுத்த முயற்சி என்ன? தெரிவித்த யோசனை என்ன? என்பனவற்றை விளக்குவதோடு, தாம் சேரப்போகும் கட்சியின் யோக்கியதை என்ன? நாணயம் என்ன? அதனால் நாட்டு மக்களுக்கு விளைய இருக்கும் நன்மை என்ன? என்பதையும் தன்னுடைய ஒட்டர்களுக்கு விளக்க வேண்டும். - - ஒட்டுக்குப் பணம் கொடுத்து வாங்கியதால், அவர் களுக்குச் சொல்லத் தேவையில்லை என்று சொல்லக் பெ.-47