உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/791

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

748 காகவே தொண்டாற்றி, முடிவெய்திய பெரியார் ஆவார். அவரது இழப்பு பரிகாரம் செய்ய முடியாத இழப்பாகும். தமிழ்நாட்டில் ஒப்பிலாமணியாய் வாழ்ந்து அரும்பெரும் காரியங்களைச் சாதித்த பெரியார் இராஜாஜி, தமது 95-வது வயதில் முடிவெய்தி மறைந்து விட்டார். அவரது பெருமைக்கு ஒர் எடுத்துக் காட்டு தெரிவிக்க வேண்டு. மானால், இராஜாஜி இல்லாது இருந்தால், மகாத்மா காந்தி'யே இருந்திருக்க மாட்டார். அது மாத்திரமல்ல, இந்திய தேசிய காங்கிரசே இருந்திருக்க மாட்டாது. தமிழ் நாட்டில் பார்ப்பனருக்கு எதிராகத் தோன்றிய ஒர் எரிமலையை, மகாத்மாகாந்தி என்னும் ஒரு புயல் மழையைக் கொண்டு தான் அவித்து, பார்ப்பனரை இருக்கச் செய்தார். 40 ஆண்டுக்கு உட்பட்ட மக்களுக்குத் தெரியாத சேதியாகும் இது. இராஜாஜி அவர்கள் 1910-ல் பார்ப்பன ரல்லாதாருடன் சமபந்தி போஜனம் செய்தார். 1915லிருந்து பார்ப்பனரல்லாத மக்கள் வீட்டில் உணவு அருந்து வார்.; அவரால், காங்கிரசில் எல்லாப் பார்ப்பனர்களும், காந்தியாரும், சமபந்தி போஜனம் அருந்தும்படி ஆயிற்று. நான் அறிய, திராவிட நாட்டில் இவரால்தான் முதலில் யார் வீட்டிலும் யாரும் உணவு அருந்தலாம் என்கிற தன்மை ஏற்பட்டது. தீவிர தேசபக்தர் மகாதியாகி என்று சொல்லப்பட்ட வ.வே.சு. அய்யர் வர்ணாசிரமப் பிரச்சாரம் செய்துகொண் டிருந்த காலத்தில், தான் மாத்திரமல்லாமல் அநேகப் பார்ப் பனரையும் துணிந்து யார் வீட்டிலும் உணவு அருந்தக்கூடிய சமுதாயச் சீர்திருத்தம் செய்த பெருமை இராஜாஜிக்குத் தான் உண்டு. மேலும், கலப்புத் திருமணத்தைத் துணிந்து முதலில் ஆதரித்தவரும் இவரே. ருக்மணிதேவி-அருண் டேல் திருமணத்தைக் கட்டுப்பாடாகப் பார்ப்பன சமு தாயமே-ஏன் சத்தியமூர்த்தி அய்யர், ரெங்கசாமி அய்யங்கார், கஸ்தூரி ரெங்க அய்யங்கார் எல்லாருமேஇதிர்த்தபோதும், துணிந்து அதை ஆதரித்ததோடு, தமது