உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/794

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

751 வேண்டுமானால், 1973-லும் தொடர்ந்து நம்முடைய ஆதரவைத் தந்து வரவேண்டும்-' என்பதுதான் பெரி .யாரின் புது வருட வாழ்த்து. மாணவர்களின் அமைதியின்மைக்குக் காரணம் கல்வித் திட்டந்தான் என்பது பெரியாரின் அசைக்க முடியாத கருத் தாகும். மாணவர்களுக்குக் கல்வி இலவசமாகி விட்டது. பலருக்குச் சாப்பாடும், புத்தகமுங்கூட இலவசமாகக் கிடைக்கின்றன. நிர்வாகிகள், பணம் சம்பாதிக்கும் ஒரு வழி யாகக் கருதியே பல தனியார்,பள்ளிகளை நடத்தி வரு கின்றனர். ஆசிரியர்கள், சம்பளம் ஒழுங்காகக் கிடைத்தால் சரிதான், நமக்கென்ன? என்று இருந்து விடுகிறார்கள். வீட்டிலிருந்து தொந்தரவு தராமலிருந்தால் சரிதான்-என்று நினைக்கின்ற பெற்றோர்களுக்குப் பொறுப்பும் இல்லை; கவலையும் இருப்பதில்லை. உத்தியோகம் பார்ப்பதற்குத் தான் கல்வி என்ற நிலைமையை மாற்றித், தொழிலில் அக்கறை ஏற்பட, நிறையத் தொழிற் பயிற்சிப் பள்ளிகள் தேவை' என்று பெரியார் எழுதியிருந்தார். மலேசியாவில் கூட சு.ம. திருமணங்கள் செல்லும் என்றும், தலைவர் வைத்தத் திருமணங்களை நடத்திக் கொள்ளலாம் என்றும் அனுமதித்ததைப் பெரியார் பாராட்டினார். 10-ந்தேதி அண்ணாமலை நகரில் பேசும்போது தி.மு.க. ஊழல் என்று ஊரெல்லாம் பேசுகிறார்களே-நான் கேட்கிறேன்-காந்தி, நேரு, இராஜாஜி, காமராஜர், இந்திராகாந்தி இவர்களில் ஊழலில் சம்பந்தப்படாதவர் யார்? சொல்ல முடியுமா?" என்று வினாத் தொடுத்தார் பெரியார். கோபிச்செட்டிப்பாளையத்தை அடுத்த நம்பியூரில் பெரியார் 17-ந்தேதி பேசும்போது இந்தியாவிலிருந்து தமிழ் நாடு தனியாகப் பிரிந்து விடவேண்டும் என்கிற பிரிவினை உணர்ச்சியை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது. இந்தியா ஒரே நாடு என்று சொல்வதே பெரிய தொரு புரட்டாகும். அதே போலத்தான் கடவுள் என்பதும் இமாலயப் புரட்டாகும். கடவுள் என்றால் காரித்துப்பு, என்று சிறுவர்களுக்கும் சொல்லித் தரவேண்டும்' எனக்