757 இருந்தன. 7-4-73 அன்று திராவிடர் கழக மாநாடு. வர வேற்புக் கழகத்தலைவர் ஆம்பூர் பெருமாள், மாநாட்டுத் தலைவர் பெரியார், திறப்பாளர் வீரமணி, கொடி உயர்த்தல் பிரபாவதி பி. ஏ., பி எல்.,-3-ந் தேதி பகுத்தறி வாளர் மாநாடு. வரவேற்புக் குழுத் தலைவர் வீராசாமி எம். எல். ஏ., தலைவர் அன்பில் தர்மலிங்கம், திறப்பாளர் பேராசிரியர், அன்பழகன், பெரியார் படத்திறப்பு க. ராஜா ராம், அண்ணா படத்திறப்பு எஸ். ராமச்சந்திரன், கண் காட்சித் திறப்பு ப. உ. சண்முகம். ஆனால் வயிற்றெரிச்சல் கொண்ட வன் பகையாளர் சிலர், 6-ந் தேதி நள்ளிரவில் மாநாட்டுப் பந்தலுக்குத் தீவைத்து, ஒடினர்! பெருமளவு தீக்கிரையாயிற்று எனினும், வரவேற்புக் குழுவினரின் அரிய முயற்சியால் காலையில் பந்தல் சரி செய்யப்பட்டது. ஊர் வலம் தொடங்குவதில் மாத்திரம் சிறிது தாமதம் நேர்ந்தது. பெரியார், வீரமணி, வீராசாமி ஆகியோர் அமர்ந்து ஊர்வல மாக வந்தனர். தி.மு.க. ஆட்சியைப் பாதுகாப்போம்; திராவிடர்கள் இந்துக்கள், அல்ல என்றே கூறவேண்டும்; சுதந்திரத் தமிழ்நாடு அடைந்தே தீருவோம்; கோயில் களைப் புறக்கணிப்போம் என்பன போன்றவை முக்கிய தீர் மானங்களாக நிறைவேற்றப்பட்டன. 3-ந் தேதி இரவு சென்னை திரும்புங்கால், தனது கார் மரத்தில் மோதியதால், காயமுற்று, ஒய்வில் இருந்த ஆர்க்காடு வீராசாமியைப், பெரியார் 17-4-73 காலையில் சென்று பார்த்து, நலம் விசாரித்தார். - - 12-4-73 அன்று பெரியார் நெய்வேலியில் நடைபெற்ற இராவணன் விழாவிலும், சிதம்பரம் வட்டத்தில் பொதுக் கூட்டத்திலும் கலந்துகொண்டார்."கிராமத்தான் உழைக்க நகரத்தான் அனுபவிப்பது என்பது கூடாது! அப்படியானால், கிராமத்தான் சூத்திரன்; நகரத்தான் பார்ப்பானா? யாரும் யாரையும் சுரண்டிப் பிழைக்க இடமிருத்தல் கூடாது. பலர் உழைத்துச் சிலர் சாப்பிடும் வர்க்க பேதம் அடியோடு ஒழிய வேண்டும். இதற்குத் துணையாகக் கூட்டுறவு உணர்வு வளரவேண்டும்!” என்று பெரியார் கருத்தினைத் தெரி
பக்கம்:தந்தை பெரியார்.pdf/800
தோற்றம்