உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/802

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

759 மடைந்தார். அமைச்சர்கள் நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன் ஆகியோரும் இடுகாட்டில் இரங் கலுரையாற்றினர். மகளிர் பாலிடெக்னிக் பிரின்சிபலான அவரது துணைவியார் சுந்தரி வெள்ளையனுக்கு அன்பர்கள் அனுதாபம் தெரிவித்தனர். 13-ந் தேதி ஆத்தூர் வட்டம் ஆர்களுரில் நடைபெற்ற நீத்தார் நினைவு நாள் நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர். பண்டரிநாதன் அய். ஏ. எஸ். தலைமையில், அமைச்சர் எஸ். ராமச்சந்திரன், வெள்ளையன் படத்தினைத் திறந்து வைத்தார். பின்னர், சென்னை மாநிலக் கல்லூரியில், பேராசிரியர் வெள்ளையன் அறக்கட்டளை நிறுவுவதற்காகப் பெரியார் 29-8-73 அன்று 1,000 ரூபாய் வழங்கினார். சேரன் போக்குவரத்துக் கழகம், தொழிலாளர்களுக்கு முதலீட்டிலும், நிர்வாகத்திலும் பங்கு அளிக்க எடுத்திருக்கிற துணிச்சலான ஒரு திட்டத்தைப் பற்றி அறிந்து, பெரு மகிழ்ச்சி அடைகிறேன். தி. மு. க. அரசாங்கம் சாதித்து வரும் பெரும் மவுணப் புரட்சிகளில் இது சரித்திர சாதனை என்பேன். நான் கடந்த 40 ஆண்டுகளாக இதை என்னுடைய கொள்கையாகச் சொல்லி வருகிறேன். 1944-ல் சேலத்தில் நடத்திய மாநாட்டில்-இலாபத்தில் தொழிலாளர்களுக்குப் பங்கு வேண்டும். அவர்களுக்கு நிர்வாகத்திலும். உரிமை வேண்டும் என்னும்படியாக ஒரு தீர்மானமே நிறைவேற்றி இருக்கிறோம். - இது ஒன்றுதான் வேலை நிறுத்தம், கதவடைப்பு போன்ற எல்லா வகையான கெடுதல்களுக்கும் முடிவான மருந்தாகம். இது தொழிலாளிகள் நடுவில் கட்டுப்பாட்டு உணர்ச்சியையும், பொறுப்பையும் ஏற்படுத்தும்; தொழிலாளி வர்க்கத்தை இனி யாரும் சுரண்ட முடியாது. நம்முடைய சேரன் போக்குவரத்துக் கழகத்திற்கும், ஆற்றலும் சொல்திறனும் ஒருங்கே அமைந்த நமது மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்கள் தலைமையிலான