உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/803

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

760 தமிழ்நாட்டு அரசாங்கத்திற்கும் என்னுடைய பாராட்டைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். அதே போலத், துடிப்பும் திறமையும் வாய்ந்த இளைஞர் நமது போக்குவரத்து அமைச்சர் மாண்புமிகு எஸ். இராமச் சந்திரன் அவர்களுக்கும் என்னுடைய பாராட்டைத் தெரிவிக்கிறேன். இதுபோன்ற செயற்கரிய காரியத்தை மற்றவர்களும் பின்பற்றுவார்கள் என்று நம்புகிறேன்.ஈ. வெ. ராமசாமி.' 5-5-73 அன்று பெரியாரின் இந்த வாழ்த்துச் செய்தி, கோவையிலுள்ள சேரன் போக்குவரத்துக்கழக மேனேஜிங் டைரக்டர் என். திருஞானசம்பந்தம் அவர்கட். அனுப்பி வைக்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து 8.ந் தேதி ஒய்வு பெற்ற ஜஸ்டிஸ் கே. எஸ். பழனிச்சாமிக்கவுண்டர், போகிற போக்கில் புழுதி வாரித் துற்றுவதுபோல், தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் முன்சிப் தேர்வு நடைபெறும் முறை களைப்பற்றி ஏதோ குறை கூறிப் பேசினாராம். நம் கையே நம் கண்ணைக் குத்துவதா? தமிழர் சமு காயம் சாண் ஏறினால் முழம் சறுக்குவது இதனால்தான்? தமிழன் என்றோர் இனமுண்டு; தனியே அவற்கொரு குணமுண்டு என்று பாடினாரே, அது இந்தக் குணந்தானா?' என்று கேட்டது “விடுதலை’. சட்-அமைச்சர் மாகவனும் இந்தத் தவறான பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்திருந்தார். 13-5-73 அன்று ஈ. வெ. கி. சம்பத்துக்கு மார்வலி ஏற் பட்டுச் சென்னை அரசினர் பொதுமருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு ஏற்கனவே சிகிக்சை பெற்று வந்த அவரது இரண்டாவது தம்பி கஜராஜ் அங்கேயே தனது 35-வது வயதில் அகால மரணமடைந்தார். அவரது சடலம் ஈரோடு கொண்டு செல்லப்பட்டது. செய்தி கிடைத்ததும், கொடைக்கானலில் இருந்த பெரியாரும் மணியம்மையாரும் உடனே புறப்பட்டு ஈரோடு சேர்ந்தனர். திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் எம். ஜி. ஆர். கட்சியான அண்ணா தி.மு. க. வேட்பாளர் மாயத்தேவர் வெற்றி