உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/805

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

762 அடுத்த நாள் பெரியார் நெய்வேலியை அடுத்த காட்டுக் கூடலூரில், 'பொதுமக்களின் சிந்தனையைக் கெடுக்கும் சினிமாமோகம் அறவே ஒழியவேண்டும். இது எவ்வளவு தூரம் முற்றியிருக்கிறது என்றால், திண்டுக்கல் தொகுதியில், எம். ஜி. ஆரின் எச்சில் பட்ட சோடா, கலர் பானங்களைக் குடிக்கும் முட்டாள்தனமான ஒட்டர்கள் நாட்டில் இருக் கின்றார்களே - இந்தப் பைத்தியக்காரத்தனம் வளர்ந் திருக்கிற நிலைக்கு நாடு கெட்டுப் போயிருக்கிறதே? ' என்று பெரிதும் மனவேதனையுற்றார் பெரியார். 28-5-73 அன்று மணியம்மையாருக்கு, அரசினர் பொது மருத்துவ மனையில், டாக்டர் சரத்சந்திரா, ஹெர்னியா ஆப்பரேஷன் செய்து, அம்மா நலமடைந்து வந்தார். 1-6-73 அன்று பெரியாரின் கார் நிதிக்காகத் தஞ்சை யில் பெரியாரிடம் 5,000 ரூபாய் வழங்கப்பட்டது. 5 ந்தேதி கரூர் நகராட்சி, பெரியாருக்கு வரவேற்பு வழங்கியது. நகர தி.க. பெரியாரின் கார்நிதிக்காக 5,005 ரூபாய்தந்தது. 6-ந் தேதி சேலம் 4,500 ரூபாய் அன்பளிப்பாய்த் தந்தது. ‘விடுதலை" ஏடு 6-6-13 அன்று 36.ம் வயதை எட்டிப் பிடித்தது! திருமண விழாக்களில் பெருமளவாகப் பங்கேற்ற பெரியார், பெண்களின் அடிமைத்தனத்தை நாம் இன்னும் பேணுவதைச் சுட்டிக் காட்டிக் கண்டித்து, அவரவர்களே, மாப்பிள்ளை தேடிக் கொள்ளவேண்டும். 22 வயது அடைந்த பின் திருமணம் செய்து கொள்வது நல்லது. அதிலும், பெண்கள் ஏதாவது வேலை செய்து, தம் காலில் நிற்கவும் பழகவேண்டும். மேலும், எதற்கெடுத் தாலும் பார்ப்பானைத் திட்டுவதால் மட்டும், அல்லது மதவாதிகளைப் பழைமை வாதிகளைக் கண்டிப்பதால் மட்டும், பயனேற்பட்டுவிடாது! கடவுள், மத சம்பிரதாயம், மூட நம்பிக்கைகளை விட்டொழிக்க வேண்டும்-என்று அறிவுறுத்தினார். 8-6-73 அன்று காலை 10 மணிக்குத் திருச்செங் கோட்டில் அண்ணா சிலையினைத் திறந்து வைத்தபோது-. எதிரிகள் முளைக்க வேண்டுமானாலும் அண்ணா பெயரைத்