765 அறிக்கை படித்தார். முதல்வர் கலைஞர், அமைச்சர்களான நாவலர், சாதிக் பாஷா பங்கேற்றனர். 2-ந் தேதி தமிழக அமைச்சர்களின் இலாக்காக்களில் சில மாறுதல்கள் செய்யப் பட்டதை ஆதரித்துப் பாராட்டிப் பெரியார் தமது கருத்தினை வெளிப்படுத்தியிருந்தார். 5-7-73 அன்று இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியிலிருந்து மணலி கந்தசாமி, ஏ.கே. சுப்பையா ஆகிய இரு சட்டமன்ற உறுப்பினர்களும் விலகினர். - - ஜூன் மாதம் 27-ம் நாள் எடமேலையூரில் பெரியார் தலைமையில், மன்னை நாராயணசாமி முன்னிலையில், மாறுதலான திருமணவிழா நடைபெற்றது. திருஞானம்இளவாசி; சிவானந்தம் எம்.எஸ்சி.-மகாராணி ஆகிய மண மக்கள், தாலி அணியாமல், ஒருவருக்கொருவர் தம்து இனிஷியல் பொறித்த டாலர் கோக்கப்பட்ட சங்கிலிகளை அணிவித்துக் கொண்டனர். பெரியார், இந்தப் புதுமை முறையை வரவேற்றதோடு, உலக நோக்கோடு பரந்தமனப்பான்மையில் வாழ வேண்டிய மனிதனைக், குடும்ப' வட்டத்துக்குள் அடக்குவதே இல்லறம் எனப்படுகிறது. கற்பு என்ற சொல்லையே அகராதியிலிருந்து நீக்கிவிட வேண்டும். ஒழுக்கம் என்பது இருவர்க்கும் பொதுவாக இருப்பது தேவை!” என்ற தமது கருத்தையும் வலியுறுத்தி னார். மதுரை மாநகராட்சியில் தந்தை பெரியார் திருவுருவப் படத்தினை மேயர் முத்து தலைமையில், அமைச்சர் என்.வி. நடராசன் ஜூலை 25-ந் தேதி திறந்தார். 23, 24, ஜூன் திங்களில் பெங்களூரில் பகுத்தறிவாளர். மாநாடு மிகச் சிறப்புடன் நடைபெற்றது. பேராசிரியர் நஞ்சுண்டசாமி வரவேற்றார். துணை சபாநாயகர் பாதக், டாக்டர் பசுவராஜ், பேராசிரியர் மல்லேஷ், பேராசிரியர் தர்மலிங்கம், விசாலக்குமி சிவலிங்கம் ஆகியோர் பங்கேற். றனர். பெரியார் பேருரை நிகழ்த்தினார். பெண்ணடிமை ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு ஆகியவை முக்கிய இடம் பெற்ற கருத்துகள். நான் எதிர்ப்புக்கு அஞ்சாதவன். மரணமே வந்தாலும் தளரமாட்டேன். என் கருத்தைத்.
பக்கம்:தந்தை பெரியார்.pdf/808
தோற்றம்