767 "பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் அய்யர் .யாத்தனர் கரணம் என்ப' என்று தொல்காப்பியத்திலேயே கூறப்பட் டிருக்கிறதே பெரும் பகுதி மக்களை உடலுழைப்புக்காரர் களாக ஆக்க, எப்படிச் சூத்திரன் என்று பார்ப்பான் சாத்திரம் செய்தானோ, அதே போலப் பெண்களை அடிமைகளாக்கக், கலியாணம் என்ற முறையையும் ஏற்படுத்தினான். இதனால்தானே , வள்ளுவனும் பெண் அடிமைக் கருத்தை எழுதினான்; தெய்வந் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை: என்று! நமது புராண இதிகாசங்கள் வலியுறுத்துவது என்ன?. ஒரு பெண் பதிவிரதையாக இருப்பதென்றால், அடிமை. உணர்வு மிகுதியாக இருக்க வேண்டும் என்பதுதானே? ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை இல்லாத நாட்டில், சுதந்தரத்தைப் பற்றிப் பேச எவனுக்கு யோக்கியதை இருக் கிறது? முஸ்லீமை எடுத்துக் கொண்டால், முகத்தை மூடி, உலகத்தில் நடமாட விடுகிறானே பெண்களை-இதை விடக் கொடுமை உண்டா? - நமது பெண்களுக்காவது உணர்ச்சி வரவேண்டாமா? ஜோடித்துக் கொள்வது - சிங்காரிப்பது -சினிமாவுக்குப் போவது-கோயிலுக்குப் போவது-என்பதோடு இருந்தால் போதுமா? தாங்களும் ஆண்களோடு சம உரிமை உள்ள வர்கள் என்கிற உணர்வு வரவேண்டாமா? உலகில் மற்ற நாட்டுக்காரன் எல்லாம் எப்படி எப்படி முன்னேறி வருகிறான்! வெள்ளைக்காரன் என்ன நம்மை விடப் புத்திசாலியா? இயற்கையாகவே அவன் நம்மைவிட அறிவில் குறைந்தவன்தானே! அவன் குளிர் தேசத்துக்காரன்; நாமோ உஷ்ண தேசத்துக்காரர். பாம்பில்கூட உஷ்ண தேசத்துப் பாம்புக்குத்தானே விஷம் அதிகம்! பூவில்கூட உஷ்ண தேசத்துப் பூவுக்குத்தானே மணமும் மதிப்பும் அதிகம் ஆகவே நாமும் அறிவைப் பயன்படுத்தினால் அவனைவிட வேகமாக முன்னேற்றமடையலாம். நான் 1932-ல் ஜெர்மனி சென்றிருந்தேன். அப்போது
பக்கம்:தந்தை பெரியார்.pdf/810
தோற்றம்