768 ஒரு வீட்டில் தங்கியிருந்தேன். அந்த வீட்டுக்காரர்களை யாரென்று விசாரித்தேன். தாங்கள் proposed husband and wite என்றார்கள்; காங்கள் உண்மையான கணவன் மனைவி ஆவதற்காக, எட்டு மாதமாக இப்படி ஒன்றாகத் தங்கியிருந்து பயிற்சி பெறுவதாகக் கூறினார்கள்! எப்படி யிருக்கிறது பாருங்கள்! அந்த மாதிரி நாடு முன்னேறுமா? சும்மா பதிவிரதம் பேசிப் பெண்களை அடிமையாக வைத்திருக்கும் நமது நாடு முன்னேறுமா? பதில் கூறுங்கள்!' கரியாப்பட்டினத்தில் ஜூலை 11-ம் நாள் பெரியார், "தி. மு. க.வை ஒழிக்க முயன்று தோற்றவர்களின் கையாள் தான் எம். ஜி. ஆர். இவர் மக்களிடம் எதைச் சொன்னால், சுலபமாக ஏமாறுவார்களோ அதைச் சொல்கிறார்” என்றார். 24-7-73 காலை பெரியார், மணியம்மையார் துணையுடன் பொது மருத்துவமனை சென்று, தமக்கு அசதியும் சோர்வும் ஏப்பமும் இருப்பதாக டாக்டர் கே. ராமசந்திராவிடம் கூறி, ஆலோசனை பெற்றுக் கொண்டார். 19-8-73 அன்று தஞ்சையில் வைத்துப் பெரியாருக்குப் புது வேன் வழங்கப்படும் என்றும், கார் நிதிக்கு அதிக நன்கொடை அளித்த மாவட்டம் அதுதான் என்றும்-1-8.73 “விடுதலை’ பறையறைந்தது! தனிப்பட்ட வர்களும் மனமுவந்து கார் நிதிக்கு நிறைய வழங்கியிருந் தனர். இந்த ஆண்டு பெரியார் பிறந்த நாளையொட்டி வெளியிடப்படும் அழகிய சிறு நூல் "உயர் எண்ணங்கள்’’ 15 காசு விலை என்றது, செய்தி ஒன்று! 8.8-13 அன்று சட்ட மன்றத்தில் ஒரு சுவையான நிகழ்ச்சி:-அமைச்சரவைtது கொணரப்பட்ட நம்பிக்கை யில்லாத் தீர்மானத்தின் மீது பேசும்போது டாக்டர் ஹண்டே, "சுயமரியாதையிருந்தால், முதல் அமைச்சர் பதவி யிலுள்ள கலைஞருக்குச் சுயமரியாதையிருந்தால், அவர் தமது பதவியை ராஜிநாமாச் செய்யட்டும்; சுயமரியாதை இருந்தால்......' என்று சொல்லிக்கொண்டே போனார். முதல்வர் கலைஞர் குறுக்கிட்டுப்பேசினார்:-"சுயமரியாதை
பக்கம்:தந்தை பெரியார்.pdf/811
தோற்றம்