உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/813

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

770 போக்குவரத்துக் கழகத்தின் மூலதனத்தில் 24 சதவீதம் தொழிலாளரின் பங்கு என்றும், இயக்குநர்கள் 10 பேரில் 2 பேர் தொழிலாளர் என்றும் தெரிந்தது. "நான் ஒரு சமத்துவத் தொண்டன். சமுதாய சமத் துவத்துக்காகப் பாடுபடுகின்றவன். அதாவது ஜாதி அமைப்பை அடியோடு, ஒழிக்கப் பாடுபடும் தொண்டன், எனக்கு ஏற்பட்டிருந்த சலிப்பை நீக்கிய ஆட்சி இது. இப்போது எங்கும் ஜாதி ஒழிப்பிற்கு எதிர்ப்பே கிடையாது. இனி நம்முடைய வேலை கோயில்களைப் புறக்கணித்தல்; நெற்றியில், உடம்பில் மதக்குறிகள் கரிப்பதை நீக்குதல்; பண்டிகை கொண்டாடாமல் இருத்தல் ஆகியவைகள்தான்' என்று பெரியார் விடுதலை'யில் தலையங்கம் தீட்டினார், 18-8-13 அன்று. அகே நாளில் கிருஷ்ணராயபுரத்தில் பேசும்போது, சேர சோழ பாண்டிய மன்னர்கள் திமிழ் நாட்டை ஆண்ட போதும், மனுதர்ம ஆட்சிதானே நடத்தி வந்தார்கள்!' என்று கேட்டார். 19-8-73 தஞ்சை மாநகரில் கோலாகலக் குது கலப் பெருநாள்; திருநாள் பெரியதோர் ஊர்வலத்தில், யானை முன் செல்ல, கருஞ்சட்டையினர் அணிவகுத்து முழக்க மிட்டுப் பின்தொடர, அழகு ஒளி உமிழத் தஞ்சையின் தனிச் சிறப்புப் புகழ் வாய்ந்த முத்துப் பல்லக்கில் பெரியாரும், வீரமணியும் அமர்ந்து வந்த பவனி, பின்னர் திலகர் திடலில் மக்கள் வெள்ளத்தினிடையே மகத்தான பொதுக்கூட்டம். அமைச்சர் எஸ். இராமசந்திரன் கூட்டத் தலைமை ஏற்றார். தஞ்சை மாவட்டக் கூட்டமெனினும், மாநிலச் சிறப்புப் பொருந்தியதாகையால், வீரமணி வரவேற்கட்டும் எனத் தோலி சுப்ரமணியம் உரைத்திட, வரவேற்புரை நிகழ்த்தினார் விடுதலை: ஆசிரியரும், கார்நிதி அமைப் பாளருமான வீரமணி. அவர் கேட்டதோ ஒரு லட்சம், ஆனால் திரண்டதோ ஒன்றரை லட்சத்திற்கும் மேல்! மீதியில் 50 ஆயிரம் ரூபாய் பெரியாரிடம் நிதியாக வழங்கப் பட்டது. 10 ஆயிரம் பெரியார் அறக்கட்டளைச் சொற் பொழிவுக்காகத் தரப்பட்டது. பெரியார்பால் கரிசன